Rekha Sivan: பயில்வானை அடித்தது ஏன் - வைரல் ஆகும் ரேகாவின் ஓபன் டாக்; பிக்பாஸுக்கும் பொளேர்!
- பயில்வான் ரங்கநாதனை அடித்தது ஏன் என ரேகா சிவன் விளக்கமளித்தது வைரல் ஆகி வருகிறது.
சென்னையைச் சேர்ந்த நடிகை ரேகா நாயர். கடந்தாண்டு தனது பெயருக்குப் பின் இருக்கும் சாதிப் பெயரைத் தூக்கிவிட்டு, தனது தந்தையின் பெயரை சேர்த்து ரேகா சிவன் என சோசியல் மீடியாக்களில் வைரல் ஆகி வருகிறார். இவர் முன்னதாக, சின்னத்திரையில் வம்சம்(2013), ஆண்டாள் அழகர்(2014), பகல் நிலவு(2016), நாம் இருவர் நமக்கு இருவர்(2018), பூவே உனக்காக (2020-2021), பைரவி (2020) ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். அவ்வப்போது, முன்னணி யூட்யூப் சேனல்களில் தோன்றி, காரசாரமாகப் பேசி வருகிறார். இதுபோன்ற லைம்லைட் ஆன விஷயங்களால், நடிகர் பார்த்திபனின் இரவில் நிழல் படத்தில் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றார். அதில் ஒரு தாய் நிர்வாண நிலையில் குழந்தைக்குப் பாலூட்டுவது போன்று நடித்திருந்தார்.
இதை நடிகரும் சினிமா பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் மிகவும் ஆபாசமாகப் பேசி வீடியோ வெளியிட்டார். இது வைரல் ஆனது. இந்நிலையில் சென்னை மெரினாவில் பயில்வான் ரங்கநாதனை பார்த்த ரேகா, கோபத்தில் கொந்தளித்து, பயில்வான் ரங்கநாதனை அடிக்கப் பாய்ந்தார். இருவரும் மாறி மாறி வசைபாடிக்கொண்டிருந்தனர். அப்போது நான் என் ஆடையை இங்கே அவிழ்த்துக்காட்டவா என பயில்வான் ரங்கநாதன் முன் எச்சரிக்கை செய்தார், ரேகா. இதனால் சைலண்ட் மோடுக்குச் சென்றார், பயில்வான் ரங்கநாதன்.
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 7-ல் பயில்வான் ரங்கநாதனும், ரேகா சிவனும் பங்கேற்பார்கள் என தகவல் பரவியது. இது இவ்வாறு இருக்க பிக்பாஸ் குறித்தும், பயில்வான் ரங்கநாதனை அடிக்க முயன்றது குறித்தும் ரேகா அளித்த பேட்டி ஒன்று வைரல் ஆகி வருகிறது. அதில், 'நான் எனக்கு உண்மையாக இருக்கிறேன். சமுதாயத்துக்கு மிகவும் உண்மையாக இருக்கிறேன். பலர் பொய் சொல்கிறார்கள். அதனால், நான் உண்மையைச் சொல்லும்போது பலரின் காதுகளுக்கு கேட்கப்படுகிறது. நான் பயில்வானை அடிப்பதற்கு முன்பு, பிக்பாஸுக்குக் கூட்டிட்டுச் சென்றார்கள் என்றால், அங்கு சென்று நான் பயில்வானை அடிக்கலாம். அதற்கு எனக்கு பிக்பாஸ் பயனுள்ளதாக இருந்திருக்கும். தப்பு செய்றவங்களை, நான் ரோட்டில் இறங்கி சண்டைபோட்டேன். அதை அங்கப்போய் பண்ணனும் என்ன இருக்கு. அதனால், எனக்கு அந்த வெளிச்சம் தேஐயில்லைனு தோணுச்சு. ஆகையால் நான் பிக்பாஸுக்கு செல்லவில்லை. நான் எழுதும் கவிதைகளை, எப்போது பார்த்தாலும் காமத்திலேயே இருக்கியா என குறைசொல்பவர்கள் இருக்கிறார்கள். அதனால் ரேகா கண்டெண்ட்’ என்கிறார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9