தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Trisha: இது தான் விஷயம்.. வருண், த்ரிஷா காதல் முறிவுக்கு இவ்வளவு பெரிய காரணம் இருக்கா?

Trisha: இது தான் விஷயம்.. வருண், த்ரிஷா காதல் முறிவுக்கு இவ்வளவு பெரிய காரணம் இருக்கா?

Aarthi Balaji HT Tamil
May 04, 2024 07:00 AM IST

Trisha and varun: த்ரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு த்ரிஷாவுக்கும், வருண் என்ற தொழிலதிபருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. நிச்சயதார்த்தம் கோலாகலமாக கொண்டாடப்பட்டாலும், திருமணம் வரை அந்த உறவு நீடிக்கவில்லை.

த்ரிஷா
த்ரிஷா

ட்ரெண்டிங் செய்திகள்

த்ரிஷாவுக்கு இவ்வளவு வெற்றி கிடைத்தும் இன்னும் திருமணம் ஆகாததால் அவரின் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். ஒருமுறை நிச்சயதார்த்தம் நடந்தது, ஆனால் அது மிக விரைவாக முடிந்தது. ஆனால் தற்போது த்ரிஷாவின் நிச்சயதார்த்தம் குறித்தும், அந்த உறவு முறிந்ததற்கான காரணம் குறித்தும் அவரின் அம்மா கூறிய விஷயங்கள் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் எவர்கிரீன் ஹீரோயின் என்று அழைக்கப்படுபவர் த்ரிஷா. 40 வயதிலும் பலருக்கும் அவர் தான் கனவு நாயகி. சமீபத்தில் இவர் விஜய்யுடன் லியோ படத்தில் நடித்தார் அதே சங்கம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இவர்கள் இருவரும் நாயகி, நாயகனாக நடித்த கில்லி திரைப்படம் பல வருடங்களுக்குப் பிறகு ரீ-ரிலீஸ் ஆனது. அதற்கும் பெரும் வரவேற்பு கிடைத்தது.

த்ரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு த்ரிஷாவுக்கும், வருண் என்ற தொழிலதிபருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. நிச்சயதார்த்தம் கோலாகலமாக கொண்டாடப்பட்டாலும், திருமணம் வரை அந்த உறவு நீடிக்கவில்லை.

இந்நிலையில் நடிகை த்ரிஷாவின் தாய் ஒரு பேட்டியில் முன்பு அதற்கான காரணத்தை தெரிவித்து உள்ளார். நிச்சயதார்த்தம் முடிந்த பிறகும் பல புதிய படங்களுக்கு த்ரிஷா தேதி கொடுத்து வருகிறார் என்பது வருணின் குடும்பத்தினருக்கு நன்றாகவே தெரியும். திருமணத்திற்கு பிறகு நடிக்க வேண்டாம் என்று வருணின் குடும்பத்தினர் கூறியிருந்தால், நாங்கள் புதிய படங்களில் கமிட் ஆகியிருக்க மாட்டோம்.

ஆனால் தன் குடும்ப நலனுக்காக நடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். நமக்குச் சற்றும் உடன்பாடில்லாத விஷயங்களில் சமரசம் செய்துகொள்வது எந்த வகையிலும் நியாயமில்லை. நம்மால் ஒத்துக்கொள்ள முடியாத சில விஷயங்கள் இருந்தால் பிரிந்து செல்வதே நல்லது.

அப்படி தான் த்ரிஷா திருமணத்தை நிராகரித்ததை என அவரின் தாய் வெளிப்படுத்தினார்.

த்ரிஷா தற்போது புதிய படங்களுக்கு தேதி கொடுப்பதில் பிஸியாக இருக்கிறார். தொழிலதிபர் வருண் மணியனுக்கும், த்ரிஷாவுக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது. அன்றைக்கு கோலிவுட்டில் பெரிய செய்தியாக இருந்தது அவரின் திருமணம்.

குடும்ப உறுப்பினர்கள் முடிவு செய்த திருமணம், மிக விரைவாக முடிவுக்கு வந்தது. இதற்கான காரணத்தை பின்னர் தெரிவிக்க த்ரிஷா விரும்பாவிட்டாலும், அவரின் குடும்பத்தினர் வெளிப்படையாக பேசினர். த்ரிஷாவை திருமணம் செய்யவிருந்த வருண் தற்போது வேறொரு நடிகையுடன் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது. இவர் நடிகை பிந்து மாதவியை காதலிப்பதாக சமீபத்தில் கிசுகிசுக்கப்பட்டது. நடிகை பிந்துவால் த்ரிஷாவின் உறவில் விரிசல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்