தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Ajith: ஆள விடுங்க டா சாமி.. அவர் சொன்ன அறிவுரை.. அஜித் பேட்டிகளை தவிர்க்க இது தான் காரணமா?

HBD Ajith: ஆள விடுங்க டா சாமி.. அவர் சொன்ன அறிவுரை.. அஜித் பேட்டிகளை தவிர்க்க இது தான் காரணமா?

Aarthi Balaji HT Tamil
May 01, 2024 09:05 AM IST

HBD Ajith: மற்ற நடிகர், நடிகைகள் படத்தின் விளம்பர பணிகளில் ஈடுபடும் போது ஏன் அஜித் மட்டும் ஈடுபடவில்லை என்ற கேள்வி அனைவரின் மனதிலும் கேள்வியாகவே நீண்ட வருடங்களாக இருக்கிறது.

அஜித் பழைய பேட்டி புகைப்படம்
அஜித் பழைய பேட்டி புகைப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

இதனிடையே அஜித்தை திரையில் மட்டுமே பார்க்க முடியும் என்பதால் ரசிகர்கள் அவர் படம் வெளியாகும் சமயத்தில் அதனை திருவிழா போல் கொண்டாடுவார்கள். சமூக வலைத்தளங்கள், பட விளம்பர வேலைகள், பேட்டிகள் உள்ளிட்ட அனைத்தையும் அவர் தவிர்த்து விட்டார். ஆனால் சினிமாவில் இணைந்த ஆராம்ப நாட்களில் அஜித் விழாக்களில் கலந்து கொள்வது, பட விளம்பர வேலைகள் செய்வது, பேட்டிகள் கொடுப்பது உள்ளிட்டவற்றில் ஈடுபட்டார்.

மற்ற நடிகர், நடிகைகள் படத்தின் விளம்பர பணிகளில் ஈடுபடும் போது ஏன் அஜித் மட்டும் ஈடுபடவில்லை என்ற கேள்வி அனைவரின் மனதிலும் கேள்வியாகவே நீண்ட வருடங்களாக இருக்கிறது.

இந்நிலையில் அஜித் முன்பு பேட்டி கொடுத்துவிட்டது ஏன் இப்போது பேட்டிகள் கொடுப்பதில்லை என்பது குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் திரைத்துறையில் நுழைந்த காலத்தில் பத்திரிக்கையாளர்களிடம் நண்பர் போல் பழகி வந்து இருக்கிறார். அவர்கள் கேட்ட கேள்வி அனைத்திற்கும் யோசிக்காமல் சட்டு என்று மனதில் தோன்றுவதையெல்லாம் பேசி இருக்கிறார்.

அது மட்டுமில்லாமல் தன்னுடைய படத்திற்கு பத்திரிக்கையாளர்களை தானே அழைத்து பேட்டியும் கொடுத்து வந்து இருக்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் நிறைய பேட்டி கொடுக்க அதை அவர்கள் சாதகமாக பயன்படுத்தி கொண்டு தவறாக எழுதி இருப்பதாக சொல்லப்படுகிறது. அவர் சொல்லாத பல விஷயங்கள் பேட்டியில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இதையெல்லாம் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வளர்ந்து வரும் நடிகர் அஜித்திற்கு போன் செய்து பேசி இருக்கிறார். மேலும் பேட்டி கொடுப்பதை குறைத்து கொள்ளும் படி அவருக்கு அறிவுரை சொல்லியதாக கூறப்படுகிறது. 

சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்தே இப்படி சொல்லி இருக்கிறார் என்றால் அதற்கு பின்பு நிறைய அர்த்தம் இருக்கிறது என அஜித் நினைத்தார் போல, அதற்குப் பிறகு தான் அஜித் பேட்டி கொடுப்பதில்லை. அஜித்தின் அசல் திரைப்படத்திற்கு பிறகு ரஜினி பேசி உள்ளார். அதற்கு பின்பு தான் அஜித் இப்படி மாறிவிட்டார் என பேசப்படுகிறது.

முன்பு ஒரு முறை பழைய பேட்டியில் அஜித்திடம் நீங்கள் மக்களின் அன்பையும் பாராட்டையும் அனுபவித்தீர்களா? என அஜித்திடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவர், “ அதை அனுபவிப்பதை விட, நான் அதை ஒரு பெரிய பொறுப்பாகப் பார்த்தேன். புகழ்ச்சியை தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்பதில் நான் அதிக விழிப்புடன் இருக்கிறேன்.

அவர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பை நான் அறிவேன், அதனால் தான் நான் அவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன். நான் அவர்களுக்கு மட்டும் சொல்கிறேன், உங்கள் பெற்றோரை கவனித்துக் கொள்ளுங்கள், கடவுள் உங்களைக் கவனிப்பார்.

அவர்களின் அன்பைத் தவிர வேறு எதையும் நான் அவர்களிடம் எதிர்பார்க்கவில்லை. எதுவும் குறையாது “ என்றார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்