Bigg Boss Elimination: கடைசி நபராக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவது யார்?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bigg Boss Elimination: கடைசி நபராக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவது யார்?

Bigg Boss Elimination: கடைசி நபராக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவது யார்?

Aarthi V HT Tamil
Jan 14, 2023 01:06 PM IST

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் கடைசி நபர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ்
பிக் பாஸ்

தனலட்சுமி, மணி உள்ளிட்டோரின் எலிமினஷன் ரசிகர்களிடம் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. இதில் 7 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி இருக்கின்றனர்.

மீதம் இருக்கும் 7 போட்டியாளர்களின் அமுத வாணன் கடந்த வாரம் நடந்த டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் வெற்றி பெற்றார். அதன் காரணமாக அவர் முதல் ஆளாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். 

இதனால் பிக் பாஸ் வீட்டில் அசீம், விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா, ஏடிகே ஆகிய 6 பேரும் இந்த வார நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்று உள்ளனர்.

இந்த ஆறு பேரில் அசீம் மற்றும் விக்ரமன் ஆகிய இருவரும் அதிகப்படியான வாக்குகளை பெற்று உள்ளனர். அதனால் அவர்கள் இந்த வாரம் வெளியேற வாய்ப்பில்லை. 

இதற்கு அடுத்த இடங்களில் ஷிவின் மற்றும் கதிரவன் இடம் பிடித்து உள்ளனர். அதனால் மைனா மற்றும் ஏடிகே தான் குறைவான வாக்குகளுடன் கடைசி இடத்தில் உள்ளனர். இவர்கள் இருவரில் ஒருவர் தான் இந்த வாரம் எலிமினேட் ஆக வாய்ப்பு இருப்பதாக மக்கள் கனித்து வைத்து இருந்தனர். 

இந்நிலையில் மக்கள் கனித்து வைத்து இருந்தது போல் குறைவான வாக்குகள் பெற்று இந்த வாரம் ஏடிகே தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறார். 

iவர் தான் இந்த பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் இருந்து கடைசியாக எலிமினேட் ஆகும் நபராக இருக்க வாய்ப்பு உள்ளது. மீதம் இருக்கும் அசீம், விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா, அமுதவாணன் ஆகியோர் இறுதி வாரத்திற்குள் செல்ல உள்ளனர்.

 இவர்கள் 6 பேரில் இருந்து ஒருவர் தான் இந்த பிக் பாஸ் 6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆகப் போகிறார்கள். இவர்களில் யார் டைட்டில் பட்டம் வெல்வார்கள் என பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். 

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.