Samantha: பூக்கள் என்றால் யாருக்கு ஒவ்வாமை? அதிர வைக்கும் சமந்தா கேள்வி!-who is allergic to flowers shocking samantha question - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Samantha: பூக்கள் என்றால் யாருக்கு ஒவ்வாமை? அதிர வைக்கும் சமந்தா கேள்வி!

Samantha: பூக்கள் என்றால் யாருக்கு ஒவ்வாமை? அதிர வைக்கும் சமந்தா கேள்வி!

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 19, 2024 02:12 PM IST

" சில அழகான விஷயங்களை பார்த்தால் நம் மனத்துக்குள் கலவையான எண்ணங்கள் தோன்றும். அதற்காக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவது என்பது மிகவும் வருத்தமானது. பூக்கள் என்றால் யாருக்கு ஒவ்வாமை என சமந்தா பதிவிட்டுள்ளார்.

பூக்கள் என்றால் யாருக்கு ஒவ்வாமை? அதிர வைக்கும் சமந்தா கேள்வி!
பூக்கள் என்றால் யாருக்கு ஒவ்வாமை? அதிர வைக்கும் சமந்தா கேள்வி! (samantharuthprabhuoffl / Instagram)

நடிகை சமந்தா உடல் நிலை பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளார். இந்நிலையில் அவ்வப்போது தனது உடல் நிலை குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது , தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருப்பதாவது, " சில அழகான விஷயங்களை பார்த்தால் நம் மனத்துக்குள் கலவையான எண்ணங்கள் தோன்றும். அதற்காக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவது என்பது மிகவும் வருத்தமானது. பூக்கள் என்றால் யாருக்கு ஒவ்வாமை என்று பதிவிட்டுள்ளார். அதில் பூக்களுக்கு அருகே சிரித்த முகத்துடன் அவர் இருக்கும் படத்தை பகிர்ந்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

முன்னதாக தெலுங்கில்யே மாயா செய்சாவா, தமிழில் பானா காத்தாடி ஆகிய படங்களின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் சமந்தா. இந்த இரண்டு படங்களும் 2010 இல் வெளியாகின. திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பு பல்வேறு விளம்பர படங்களில் தோன்றியுள்ள சமந்தா, மாடலிங்கிலும் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் பல ஹிட் படங்களை கொடுத்து தென்னிந்திய சினிமாக்களில் டாப் நாயகியாக வலம் வந்த சமந்தா தி பேமிலி மேன் 2 வெப் சீரிஸ் மூலம் பான் நடிகையாக மாறினார். இதைத்தொடர்ந்து இவரது யசோதா, சகுந்தலம் ஆகிய படங்களும் இந்தியா முழுவதும் வெளியாகின.

இந்நிலையில் சமந்தா கடந்த 2017ஆம் ஆண்டு நாக சைதண்யாவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்தனர். ஆனால் தொடர்ச்சியாக நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். திருமண விவாகரத்தைத் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. ஆனால் கிசுகிசுக்களுக்கெல்லாம் பெரிதாக உணர்ச்சி வசப்படாத சமந்தா தொடர்ச்சியாக தனது திரைப்பயணத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் நடிகை சமந்தா திடீரென மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டார். பல நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதற்கிடையில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான குஷி திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் சமந்தா சமூக வலைத்தளத்தில் அடிக்ககடி புகைப்படம் வெளியிடுவது வழக்கம். அந்த வயில் தற்போது பூக்களுடன் இருக்கும் தனது படத்தை வெளியிட்டு பூக்கள் என்றால் யாருக்கு ஒவ்வாமை என்று பதிவிட்டுள்ளார்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.