Dheena Re Release: ‘டேய் பாட்ட மாத்து’.. தீனா இடைவேளையில் விஜய் பாட்டு..கொந்தளித்து சட்டையைக்கழற்றிய அஜித் ரசிகர்கள்!-when the thalapathy vijay goat song began to play during the dheena interval ajith fans removed their shirts theater - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Dheena Re Release: ‘டேய் பாட்ட மாத்து’.. தீனா இடைவேளையில் விஜய் பாட்டு..கொந்தளித்து சட்டையைக்கழற்றிய அஜித் ரசிகர்கள்!

Dheena Re Release: ‘டேய் பாட்ட மாத்து’.. தீனா இடைவேளையில் விஜய் பாட்டு..கொந்தளித்து சட்டையைக்கழற்றிய அஜித் ரசிகர்கள்!

Kalyani Pandiyan S HT Tamil
May 03, 2024 05:23 PM IST

Dheena Re Release: அஜித் நடித்து வெளியான தீனா திரைப்படம், அஜித்தின் பிறந்தநாளான மே1ஆம் தேதியான நேற்றைய தினம் ரீ ரீலிஸ் ஆனது.

அஜித்குமார் ரசிகர்கள்!
அஜித்குமார் ரசிகர்கள்!

இந்த இடைவெளியைப் பயன்படுத்தி புகுந்த மலையாளத் திரைப்படங்களான மஞ்சும்மல் பாய்ஸூம், பிரேமலுவும் டப் கூட செய்யாமல், தமிழ்நாட்டில் நேரடியாக ரிலீஸாகி, பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி ரூபாய் வசூல் செய்தது.

மேலும் இந்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்ட, சில ஹிட் படங்களை எடுத்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள், பழைய படங்களை தமிழ்நாட்டில் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் விஜய் நடித்த ‘கில்லி’ திரைப்படம், தற்போது ரீ-ரிலீஸ் ஆகி பத்து கோடி ரூபாய்க்கும் மேல் கலெக்‌ஷனைப் பெற்றுள்ளது. 

அப்போது பலரும் அஜித்தின் படத்தை ரீ ரிலீஸ் செய்யவேண்டும் இணையத்தில் தொடர்ந்து பேசி வந்தனர். அந்த வகையில் அஜித் நடித்து வெளியான தீனா திரைப்படம், அஜித்தின் பிறந்தநாளான மே1ஆம் தேதியான நேற்றைய தினம் ரீ ரீலிஸ் ஆனது.

பிறந்த நாள் செலிபிரேஷனோடு, அவரின் ஹிட் படங்களும் ரீ ரிலிஸ் ஆனதால், அஜித் ரசிகர்கள் ஏக குஷியாகி, அதிகாலையிலேயே திரையரங்குகள் முன்னால் குவிந்தனர்.

குறிப்பாக, சென்னை காசி திரையரங்கம் முன்னிலையில், அதிக ரசிகர்கள் குவிந்த காரணத்தால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சில அஜித் ரசிகர்கள் அங்கு பாதுகாப்பிற்கு இருந்த காவலர்களிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

சில ரசிகர்கள் எல்லை மீறி, திரையங்கத்தில் வைக்கப்பட்டு இருந்த விஜயின் கில்லி பட பேனரை கிழித்தனர். இது தொடர்பான வீடியோ விஜய் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அதே போல, சென்னை ரோகிணி திரையரங்கத்தினுள்ளேயே சில அஜித் ரசிகர்கள் பட்டாசு வெடித்து படத்தை கொண்டாடினர். 

இப்படி பல்வேறு இடங்களில், பல்வேறு விதமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அஜித் ரசிகர்கள், ஒரு திரையரங்கில் மோசமான சம்பவம் ஒன்றில் ஈடுபட்டு இருக்கின்றனர். 

இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், தீனா படத்தின் இடைவேளையின் போது, விஜயின் கோட் படத்தில் இடம் பெற்ற விசில் போடு பாடல் திரையிடப்பட்டது. இதைப்பார்த்து டென்ஷனான அஜித் ரசிகர்கள் விஜய் பாடலை போடாதே என்று சொல்லி, சட்டையைக் கழற்றி, மானிட்டரை மறைத்து கூச்சலில் ஈடுபட்டனர். இது கண்டனங்களை பெற்று வருகிறது. 

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம், தி கோட். அதாவது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (The Greatest Of All Time) என்பதின் சுருக்கமே ‘ தி கோட்’. இது விஜய்யின் 68ஆவது படமாகும். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடித்துவருகிறார்.

தவிர, இந்தப் படத்தில் பிரசாத், பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, லைலா, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி அமரன், யுகேந்திரன் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 நடிகர் விஜய், இந்த திரைப்படத்தில், இரண்டு வேடங்களில் நடித்திருப்பதாகவும் தெரிகிறது. முன்பே, நடிகர் விஜய், அழகிய தமிழ் மகன், வில்லு, கத்தி, மெர்சல்,பிகில், லியோ ஆகியப் படங்களில் இரட்டை வேடங்களில் நடித்திருந்த நிலையில் தற்போதும் இரட்டை வேடத்தில் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் மூலம் நடிகர் விஜய்யின் படத்துக்கு, பல ஆண்டுகளுக்குப் பின், யுவன் சங்கர் ராஜா முதன்முறையாக இசையமைக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ரிலீஸாகும் வகையில் தயார் ஆகி வருகிறது. இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பாக, கல்பாத்தி அகோரம்,கல்பாத்தி கணேஷ், கல்பாத்தி சுரேஷ் என சகோதரர்கள் மூவர் இணைந்து தயாரிக்கின்றனர்.

‘’தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'' படத்துக்குண்டான ஒளிப்பதிவினை சித்தார்த்தா நுனி புரிய, வெங்கட் ராஜின் என்பவர் எடிட் செய்கிறார். இப்படத்துக்குண்டான வசனத்தை விஜி மற்றும் வெங்கட் பிரபு ஆகிய இருவரும் இணைந்து எழுதியுள்ளனர்.

இப்படத்தில் கங்கை அமரன், மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து, விவேக் ஆகிய நால்வர் சேர்ந்து, படத்துக்குண்டான பாடல்களை எழுதியுள்ளனர்.

பொதுவாகவே விஜய் படத்தில் நடனம் பட்டையைக் கிளப்பும். இப்படத்திலும் நடனத்திற்கு வலுவாக இடம்தரும் ராஜூ சுந்தரம், சேகர் மற்றும் சதீஷ் ஆகியோர் சேர்ந்து பாடல்களுக்கு நடன அமைப்பினை செய்துள்ளனர்.

அதேபோல், விஜய் படத்தில் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுக்கும் பஞ்சமிருக்காது. அதற்கும் தீனிபோடும் வகையில் திலீப் சுப்புராயன் மாஸ்டர், தி கோட் திரைப்படத்துக்கான சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். மேலும், இத்திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் அண்மையில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.