Serials TRP: விறுவிறுப்பான கல்யாண எபிசோட்.. இந்த வாரமும் நம்பர் 1 இடத்தில் நீடிக்கும் சன் தொலைக்காட்சி!-what is the serial trp rating for tamil serials last week - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Serials Trp: விறுவிறுப்பான கல்யாண எபிசோட்.. இந்த வாரமும் நம்பர் 1 இடத்தில் நீடிக்கும் சன் தொலைக்காட்சி!

Serials TRP: விறுவிறுப்பான கல்யாண எபிசோட்.. இந்த வாரமும் நம்பர் 1 இடத்தில் நீடிக்கும் சன் தொலைக்காட்சி!

Aarthi Balaji HT Tamil
Sep 22, 2024 11:34 AM IST

Serial TRP: கடந்த வாரம் தமிழ் சீரியல் பெற்ற புள்ளிகளும் அவற்றின் இடங்களும் இதோ

Serials TRP: விறுவிறுப்பான கல்யாண எபிசோட்.. இந்த வாரமும் நம்பர் 1 இடத்தில் நீடிக்கும் சன் தொலைக்காட்சி!
Serials TRP: விறுவிறுப்பான கல்யாண எபிசோட்.. இந்த வாரமும் நம்பர் 1 இடத்தில் நீடிக்கும் சன் தொலைக்காட்சி!

கயல்

சன் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல், கயல். அக்டோபர் 25, 2021 ஆம் ஆண்டு முதல் தொடங்கிய இந்த தொடர் தற்போது வரை வெற்றிகரமாக நடந்து வருகிறது. தந்தையை இழந்து குடும்பத்தின் மொத்த பொறுப்புகளையும் கயல் சுமக்கிறார்.

அவர் செய்யும் செயல்களுக்கு பல்வேறு தடைகளை ஏழுகிறது. அதை எல்லாம் தாண்டி பிரச்னைகளை எப்படி சமாளிக்கிறார் என்பதே கதை. கயல் சீரியல், 8. 83 புள்ளிகளுடன் டி. ஆர். பியில் முதல் இடத்தில் இருக்கிறது.  நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த, கயல், எழில் திருமணம் தற்போது நடக்க போகிறது. மண்டபம் வரை வந்துவிட்டதால் திருமணம் நடக்குமா? நடக்காதா ? அதை தடுக்க வருவார்கள் என்று விருவிருப்பாக சென்று கொண்டு இருக்கிறது. ஒரு பக்கம் பெரியப்பா குடும்பம் மறு பக்கம் டாக்டர் கெளதம் என இரண்டு பேரை சமாளித்து கயல் திருமணம் நடக்க வேண்டும்.

சிங்கப்பெண்ணே

கிராமத்தில் மகிழ்ச்சியாக இருந்த பெண், குடும்ப கஷ்டத்தை போக்க சென்னை வருகிறாள் ஆனந்தி. வேலைக்கு வந்த ஒரு பெண்ணின் கதை என்னவாகிறது என்பதே சிங்கப்பெண்ணே கதை. சமீபத்தில் தொடங்கிய இந்த தொடர் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் இந்த வார டிஆர்பியில் முதல் இடத்தில் இருக்கிறது. இந்த வாரம் 8. 49 டிஆர்பி புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.

மூன்று முடிச்சு

நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா , அ.சுரேஷ் பாபு தயாரிப்பில் ஒளிபரப்பாகி வரும் புது சீரியல் மூன்று முடிச்சு. இந்த வாரம், 8. 11 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் இருக்கிறது.

மருமகள்

' மருமகள்'  என்ற புதிய சீரியல் சன் தொலைக்காட்சியில் ஜூன் 10 முதல் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த புதிய சீரியல் திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாக உள்ளது. கேப்ரியல்லா நாயகியாக நடிக்கிறார். 

7. 7 புள்ளிகள் பெற்று மருமகள் சீரியல் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. ஆதிரையை எப்படியாவது திருமணம் செய்ய வேண்டும் என்று முனைப்பில் இருக்கிறார், பிரபு. ஆனால் ஒரு பக்கம் கல்யாண செலவை நினைத்து அவர் பயத்திலும் இருக்கிறார். எல்லாவற்றிலும் கணக்கு பார்க்கும் அவர், திருமணத்திலும் அதையே பின் செய்கிறார்.

சுந்தரி

சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் சுந்தரி. இந்த வார டிஆர்பி 6 . 82 புள்ளிகள் பெற்று ரேட்டிங் லிஸ்டில் 5 வது இடத்தில் சுந்தரி இருக்கிறது. இரண்டு குட்டி பிள்ளைகளுடன் சுந்தரி செயல் ரசிகர்களை கவர்ந்து உள்ளது.

டி. ஆர். பியில் முதல் ஐந்து இடங்கள் பிடித்த சீரியல்கள் அனைத்து சன் தொலைக்காட்சியை சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.