Rajini Sathyaraj:அசிங்கப்படுத்திய ரஜினி;தீரா பகையாக மாறிய நட்பு!- மோதல் காரணம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rajini Sathyaraj:அசிங்கப்படுத்திய ரஜினி;தீரா பகையாக மாறிய நட்பு!- மோதல் காரணம்!

Rajini Sathyaraj:அசிங்கப்படுத்திய ரஜினி;தீரா பகையாக மாறிய நட்பு!- மோதல் காரணம்!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 31, 2023 08:11 AM IST

ரஜினிக்கும், சத்யராஜூக்கும் இடையேயான நீண்ட நாட்களாக நிலவி வரும் மோதலுக்கு காரணம் என்ன என்பதை இங்கு பார்க்கலாம்

ரஜினி சத்யராஜ்
ரஜினி சத்யராஜ்

ரஜினிக்கும் சத்யராஜூக்கும் இடையேயான மோதல் என்பது திரைவட்டாரம் அறிந்ததே. ‘தம்பிக்கு எந்த ஊரு’ ‘மிஸ்டர் பாரத்’ உள்ளிட்ட பல படங்களில்  இணைந்து நடித்த அவர்கள் பின்னாளில் இணைந்து நடிப்பதையே தவிர்த்து வந்தனர்.  

குறிப்பாக காவேரி நதி தொடர்பாக சினிமா பிரபலங்கள் நடத்திய கூட்டத்தில் சத்யராஜ் ரஜினியை கடுமையாக தாக்கி பேசியிருந்தார். ஆனால் அவர் அப்படி வெடித்தற்கு பின்னால், நீண்ட நாட்களாக அவர் மனதில் ரஜினியின் மீது இருந்த வெறுப்பே காரணம் என்று பேசப்பட்டது. அப்படி என்ன ரஜினிக்கும் சத்யராஜூக்கும் பிரச்சினை இந்த மோதல் எங்கு தொடங்கியது? உள்ளிட்ட பலவற்றை பிரபல யூடியூப் செனல் ஒன்றிற்கு பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பகிர்ந்துள்ளார்.

மோதல் தொடங்கிய இடம் 

 

இது குறித்து அவர் கூறும் போது, “ சத்யராஜூக்கும் ரஜினிக்குமான சண்டையானது இன்று நேற்று தொடங்கியதில்லை.  அந்த காலத்தில் சத்யராஜ் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். கோடம்பாக்கத்தில் அவர் நடிக்க வாய்ப்புதேடும் போது கூட, நல்ல வசதியான ரூம் எடுத்தே தங்கியிருந்தார். அப்போதே அவரிடம் ஜாவா பைக் இருந்தது. தொடர்ந்து முயற்சி செய்து சின்ன சின்ன கதாபாத்திரங்களில் சத்யராஜ் நடித்துக்கொண்டிருந்த போது, ரஜினி தன்னுடைய பல படங்களில் சத்யராஜை நடிக்க வைத்தார். 

பொய் சொன்ன ரஜினி 

 

ஆரம்பத்தில் இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்த நிலையில், ரஜினியின்  ‘தம்பிக்கு எந்த ஊரு’ படத்தில் சத்யராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்; நீங்கள் இப்போது பார்க்கும் ரஜினிக்கும், 80 களின் ரஜினிக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அப்போதெல்லாம் ஷூட்டிங்கில் இருக்கும் ரஜினி ஏதாவது கிண்டல், கேலி, குசும்புகள் செய்து  கலாட்டா செய்து கொண்டே இருப்பார். ஆனால் சத்யராஜ் அப்படி கிடையாது; ஷூட்டிங் உண்டு தான் உண்டு என இருப்பார். 

ஒரு நாள் ரஜினியும் மாதவியும் உட்கார்ந்து இருக்கும் போது, மாதவி ரஜினியிடம், சத்யராஜை யார் என்று கேட்க, அதற்கு ரஜினி இவரா... இவர் நியூயார்க்கில் (அமெரிக்க நகரம்) உள்ள கல்லூரியில் பேராசியராக பணியாற்றி வருகிறார். ஆனால் தமிழ்நாடை சேர்ந்தவர்தான். எப்போதாவது இப்படி வந்து நடித்துவிட்டு செல்வார் என்று கிண்டலாக சொல்லியிருக்கிறார். இதனை உண்மை என்று நம்பிய மாதவி, சத்யராஜிடம் ஆங்கிலம் பற்றி கேட்க, சத்யராஜ் திணறி இருக்கிறார். இதனை தூரத்தில் இருந்த பார்த்த சுலக்‌ஷ்னா இதை பார்த்து சிரித்துக்கொண்டு இருந்தார். தொடர்ந்து மாதவிடம் வந்த சுலக்‌ஷனா, சத்யராஜ் குறித்த விவரத்தை கூறி இருக்கிறார். பின்னர் இந்த வேலையை பார்த்தது ரஜினி என்று சத்யராஜூக்கு தெரிந்தது. அப்போதுதான் சத்யராஜூக்கும், ரஜினிக்கும் இடையேயான ஈகோ தொடங்கியது. 

இந்த மோதல் எப்போது அதிகமானது  ‘மிஸ்டர் பாரத்’ படத்தில்; அந்தப்படத்தில் ரஜினியின் அப்பாவாக சத்யராஜ் நடித்திருந்தார். இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் இயக்கிய அந்தப்படத்தின் நீளம் கருதி, சத்யராஜின் காட்சிகளை நீக்க முடிவெடுக்கப்பட்டது. இது சத்யராஜிற்கு தெரிய, இது குறித்து முத்துராமனிடம் கேட்டு இருக்கிறார். அப்போது முத்துராமன் கதாநாயகன் சம்பந்தமான காட்சிகளை நீக்க முடியாது என்று சொல்லிவிட, சத்யராஜ் ரஜினிதான் இதனை செய்ய சொல்லியிருக்கிறார் என்று நினைத்து கடும் கோபம் அடைந்தார். இன்னொரு விஷயம் பெங்களூரை சேர்ந்த கன்னட நடிகர் இங்கே வந்து இப்படி கைத்தட்டலை அள்ளுகிறாரே என்ற அதிருப்தியும் சத்யராஜிற்கு இருந்தது. 

அதன் பின்னர் கமலுடன் கைகோர்த்த சத்யராஜ், அவருடன் பல படங்களில் நடித்தார். ரஜினிக்கும் சத்யராஜூக்கும் இடையேயான அந்த வெறுப்புதான் நாளடைவில் பெரிதாகி, காவேரி நீர் பிரச்சினை தொடர்பாக வள்ளூவர் கோட்டத்தில் நடந்த கூட்டத்தில் பெரிதாக வெடித்தது. அந்த நிகழ்ச்சியில் ரஜினியை நேரடியாகவே தாக்கினார் சத்ய்ராஜ்.. அதன் வெளிப்பாடுதான்.. பாகுபலி படத்தை கர்நாடகாவில் வெளியிட கிளம்பிய எதிர்ப்பு.. பின்னர் சத்யராஜ் மன்னிப்புக்கேட்ட உடன் அங்கு படம் ரிலிஸானது.” என்று அவர் பேசினார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.