Soundarya Helicopter Crash: வயிற்றில் குழந்தை..கரிந்து போன கலை முகம்.. செளந்தர்யா இறந்த கதை.. நெஞ்சடைக்கும் சோகம்!
நடிகை செளந்தர்யா கடைசி நேர நிமிடங்களை விவரிக்கிறது இந்தக்கட்டுரை!
இது குறித்து பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேசும் போது, “நடிகை சௌந்தர்யாவின் மரணம் இந்திய சினிமாவையே உலுக்கி விட்டது என்று சொல்லலாம். அந்த சமயத்தில் போட்டோக்கள் எல்லாம் கூகுளில் அவ்வளவு எளிதாக இப்போது கிடைப்பது போல கிடைக்காது. மந்தைவெளியில் இருக்கும் ஞானம்தான் பழைய நடிகைகள், புது நடிகைகள் என அனைவரது புகைப்படங்களையும் வைத்திருப்பார்.
இரவோடு இரவாக அவரை பத்திரிகையாளர்கள் எழுப்பி அவரிடம் இருந்து புகைப்படங்களை வாங்கினர். ஒரு பக்கத்திற்கு அவரது வாழ்க்கை வரலாற்றுடன் சேர்த்து அவர் இறந்த செய்தியும் பத்திரிக்கைகளில் வந்தன. அவர் நன்றாக மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்த போது தான் திருமணம் செய்து கொண்டார் அவரது கணவர் பெயர் ரகு. அவர் சாப்ட்வேர் இன்ஜினியர் ஆக பணியாற்றினார். பலரும் சௌந்தர்யா விடம் தற்போது கல்யாணம் வேண்டாம் மார்க்கெட் இறங்கி விடும் என்று எச்சரித்தார்கள்.
ஆனால் சௌந்தர்யாவோ அவர்கள் பேச்சைக் கேட்கவில்லை தனக்கு எனது அம்மா அப்பாவின் சந்தோஷம்தான் முக்கியம் என்று சொல்லி திருமணம் செய்து கொண்டார். கன்னடத்தில் அவர் நடித்த படங்கள் எல்லாம் ஹிட் அடித்தன. அவருக்கு அங்குள்ள கரீம் நகரில் நல்ல செல்வாக்கும் இருந்தது. அங்கு அவர் தன்னுடைய சம்பளத்தின் பெரும் பகுதியை நல்ல காரியங்களுக்கு செலவிட்டார். இந்த நிலையில்தான் அவரை அந்த பகுதியில் நிறுத்தினால் ஜெய்க்கலாம் என்று அவர் அரசியலில் ஈடுபடுத்தப்பட்டார்.
அவர் அப்போது கர்ப்பிணியாக இருந்ததாக சொல்லப்படுகிறது. அதற்காகத்தான் அவர் சாலை மார்க்கமாக பல இடங்களுக்கு செல்லாமல், விமானத்தில் பயணித்ததாக ஒரு தகவலும் உண்டு. அன்றைய தினம்அவர் கரீம் நகரில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்தார்.
அவருடன் அவரின் சகோதரர் சகோதரின் நண்பர்கள் என அனைவருமே அந்த விபத்தில் இறந்து போனார்க. அந்த விபத்தைச் சுற்றி பல சர்ச்சைகள் இருந்தன. குறிப்பாக அவர் அந்த விபத்தில் இறக்கவில்லை என்றும் அந்த விமானத்தில் அவர் பயணிக்கவில்லை என்றும் கூட தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் தான் இரண்டு நாட்களுக்கு பிறகு விமானத்தில் உள்ள கருப்பு பெட்டியில் பதிவான ஆதாரங்களை வைத்து உண்மை கண்டுபிடிக்கப்பட்டது அதிலிருந்து கிடைத்த ஒலிப்பதிவு உள்ளிட்டவற்றை வைத்து அவர் இறந்து விட்டார் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. வானத்தில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தை நோக்கி பறவைகள் கூட்டமாக வந்ததாகவும் இந்த நிலையில் திசை திருப்புவதற்காக விமானி ஏதோ செய்யப்போக விமானம் விபத்துக்குள்ள தான் ஆகும் தகவல்கள் சொல்லுகினறன.
நன்றி: ஆகாயம் தமிழ்!
டாபிக்ஸ்