Sriya Reddy: வெள்ளை அல்லது கருப்பு; நடுநிலை எனக்கு வராது; ‘திமிரு’ படம் பலருக்கு என் மேல பயத்த உருவாக்கிடுச்சு - ஸ்ரேயா!
என்னோட தோற்றத்தின் காரணமா மக்கள் நான் ரொம்ப வலிமையான பொண்ணுன்னு நினைக்கிறாங்க. ஆனா உண்மையிலேயே நான் யார் என்பதை தெரிஞ்சிக்க என்னைய இன்னும் நீங்க நல்லா தெரிஞ்சிக்கனும். நான் ஒரு பழுப்பு நிறப்பெண்.”
கடந்த 2002 ஆம் ஆண்டு நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான ‘சாமுராய்’ படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா ரெட்டி. நடிகர் விஷால் நடிப்பில் வெளியான ‘திமிரு’ படத்தில் இவர் ஏற்று நடித்த வில்லியாக கதாபாத்திரம் இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது. அதன் பின்னர் ‘வெயில்’ ‘காஞ்சிவரம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் விஷாலின் அண்ணனான விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டார் செட்டிலானார்.
இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அண்டாவ காணோம்’ திரைப்படம் ரிலீஸூக்காக காத்திருக்கிறது. அதே போல கேஜிஎஃப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘சலார்’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இவர் அண்மையில் ‘திமிரு’ படம் பற்றியும் தன்னுடைய சினிமா பயணம் பற்றியும் தனியார் இணையதளம் ஒன்றிற்கு பேட்டியளித்தார்.
அதிலிருந்து சிலவை உங்களுக்காக..
“நான் இந்த சினிமா உலகத்துக்கு காசு சம்பாதிக்கிறதுக்காகவோ அல்லது பிரபலத்திற்காகவோ வரல.. நடிப்பு மேல உள்ள ஆர்வத்தாலத்தான் இந்த துறைக்குள்ள நுழைஞ்சேன். ‘திமிரு’ படம் வெளிவந்து 16 வருஷங்கள் ஆகிருச்சு.
ஆனா இன்னமும் மக்கள் நான் அந்தப்படத்துல நடிச்ச ஈஸ்வரி கதாபாத்திரத்தை நினைவுல வச்சிருக்காங்க. அந்த சமயத்துல நான் எதிர்மறையான கேரக்டர் எடுத்து பண்றத பத்தி கொஞ்சம் கூட கவலைப்படல. என்னைப்பொருத்த வரை அந்த சமயத்துல அது எனக்கு சவாலா இருந்துச்சு.
திமிரு படத்துல நான் நடிச்சதுக்குப்புறமா சில மக்கள் என்னை வெறுத்தாங்க.. என் மேல அவங்களுக்கு ஒரு விதமான பயம் வந்துடுச்சு. ஆனா இப்ப சமூகவலைதளங்கள்ள ஈஸ்வரிக்கு கிடைக்கக்கூடிய அன்ப கண்கூடா பாக்க முடியுது
காஞ்சிவரம், வெயில் போன்ற படங்கள்ள நான் மென்மையான கேரக்டர்கள நடிச்சிருந்தாலும், எதிர்மறையான கேரக்டர்கள் நடிக்க நான் வலுக்கட்டாயமா தள்ளப்பட்டேன்னுதான் சொல்லணும். நான் வலிமையானவளாவும், தைரியமானவளாவும் மாறினேன்.
என்னாலா ஒன்னு வெள்ளையா இருக்க முடியும் அல்லது கருப்பா இருக்க முடியும். இரண்டுக்கும் நடுவுல என்னால ட்ராவல் பண்ண முடியாது. என்னோட தோற்றத்தின் காரணமா மக்கள் நான் ரொம்ப வலிமையான பொண்ணுன்னு நினைக்கிறாங்க. ஆனா உண்மையிலேயே நான் யார் என்பதை தெரிஞ்சிக்க என்னைய இன்னும் நீங்க நல்லா தெரிஞ்சிக்கனும். நான் ஒரு பழுப்பு நிறப்பெண்.”என்று பேசினார்.
டாபிக்ஸ்