Vishal: கிழிந்த சட்டையை விழாவில் பங்கேற்ற விஷால்.. பின்னணி என்ன?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vishal: கிழிந்த சட்டையை விழாவில் பங்கேற்ற விஷால்.. பின்னணி என்ன?

Vishal: கிழிந்த சட்டையை விழாவில் பங்கேற்ற விஷால்.. பின்னணி என்ன?

Aarthi V HT Tamil
May 06, 2023 03:02 PM IST

சென்னையில் ஒரு விழாவில் கிழிந்த சட்டையுடன் நடிகர் விஷால் கலந்து கொண்டார்.

விஷால்
விஷால்

அதன்பிறகு பேசிய விஷால், "விவசாயிகளுக்காக நான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன். சென்னையில் ஒரு கிராமம் விழா நிழச்சியில் வரும் வருவாய் அனைத்தும் நலியுற்ற விவசாயக் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்பதாலேயே நான் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்.

விவசாயி 'சேற்றில் கால் வைத்தால் தான் நாம் அனைவரும் சோற்றில் கை வைக்க முடியும்!' என்பது உண்மையானது. என்னுடைய திரைப்படங்களுக்கு திரையரங்குகளில் விற்பனையாகும் டிக்கட்டுகளில் ஒரு டிக்கட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் விவசாயக் குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கி வருகிறேன்.

கல்வியால் எப்போதும் இந்த உலகத்தை ஆள முடியும், அந்த கல்விக்காக நான் யாரிடமும் பிச்சை எடுக்க தயங்கியது கிடையாது. எனக்காக இல்லை, படிக்க முடியாத எத்தனையோ மாணவ, மாணவியர்களுக்காக தான். அந்த வகையில் சத்யபாமா ப‌ல்கலைக்கழகத்தின் வேந்தர் மரிய ஜீனா ஜான்சனுக்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

எனது தேவி அறக்கட்டளை மூலம் பல மாணவ, மாணவியர்களை படிக்க வைத்து வருகிறேன். அதற்குத் துணையாக எங்களுடைய தேவி அறக்கட்டளை மூலம் மாணவ, மாணவியர்கள் படிப்பதற்கு உதவி செய்து வருகிறார். இது போன்று எண்ணற்ற மாணவ, மாணவியர்ளை மரிய ஜீனா படிக்க வைத்துவருகிறார் .

நீங்கள் ஒரு ரூபாய் கொடுத்தால் நீங்களும் உதவலாம். இங்கு கலந்துகொண்டுள்ள அனைவரும் உங்களால் முடித்தால் ஒரு ரூபாய் கொடுக்க விரும்பினால் உங்களால் ஒரு விவசாயி குடும்பத்துக்கோ அல்லது ஒரு மாணவ, மாணவி படிப்பதற்காகவோ உதவ முடியும். போற்றுவோம் விவசாயத்தை, காப்போம் விவசாயியை.

இது போன்ற விவசாயம் போற்றும் நிழச்சிகள் அனைத்து மாவட்டங்களில் நடத்தினால் நன்றாக இருக்கும்" என்றார்.

அங்கு வைக்கப்பட்டிருந்த வில்லேஜ் டிக்கெட் கண்காட்சியை மாட்டு வண்டியில் பயணம் செய்து சுற்றிப் பார்த்தார். பின்பு அங்கு அமைக்கப்பட்டிருந்த வயலில் பெண்களுடன் இறங்கி நடவு நட்டார்.

அப்போது அவரது தோள்பட்டை பகுதியில் சட்டை கிழிந்தது. உடனடியாக மாற்று சட்டை ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த சட்டையை ஏற்க மறுத்த விஷால் "விவசாயத்தால் கிழிந்த சட்டை அப்படியே இருக்கட்டும்" எனக் கூறி நிகழ்ச்சி முழுவதும் அதே சட்டையுடன் பங்கேற்றார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.