Vishal: “அவ ஒரு பைத்தியக்காரி.. என் பெயரு அடிபடவே இல்ல” - ஸ்ரீ ரெட்டியை தொங்கபோட்டு உரித்த விஷால்!-vishal latest interview about sri reddy sexual allegations he said srireddy is a madwoman - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vishal: “அவ ஒரு பைத்தியக்காரி.. என் பெயரு அடிபடவே இல்ல” - ஸ்ரீ ரெட்டியை தொங்கபோட்டு உரித்த விஷால்!

Vishal: “அவ ஒரு பைத்தியக்காரி.. என் பெயரு அடிபடவே இல்ல” - ஸ்ரீ ரெட்டியை தொங்கபோட்டு உரித்த விஷால்!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 30, 2024 05:52 PM IST

Vishal: “மீ டூ இயக்கத்தின் பொழுது என்னுடைய பெயரும், கார்த்தியின் பெயரும் பெரிதாக அடிபடவில்லை. ஆனால், நடிகை ஸ்ரீ ரெட்டிதான் பைத்தியக்காரி போன்று” - ரீ ரெட்டியை தொங்கபோட்டு உரித்த விஷால்!

Vishal: “அவ ஒரு பைத்தியக்காரி.. என் பெயரு அடிபடவே இல்ல” - ஸ்ரீ ரெட்டியை தொங்கபோட்டு உரித்த விஷால்!
Vishal: “அவ ஒரு பைத்தியக்காரி.. என் பெயரு அடிபடவே இல்ல” - ஸ்ரீ ரெட்டியை தொங்கபோட்டு உரித்த விஷால்!

அவள் ஒரு பைத்தியக்காரி

இது குறித்து அவர் பேசும் போது, “ மீ டூ இயக்கத்தின் பொழுது என்னுடைய பெயரும், கார்த்தியின் பெயரும் பெரிதாக அடிபடவில்லை. ஆனால், நடிகை ஸ்ரீ ரெட்டிதான் பைத்தியக்காரி போன்று என்னுடைய பெயரை பயன்படுத்தினாள். அதன் பின்னர் அவள் அதற்காக ஆனந்த விகடனுக்கு கொடுத்த பேட்டியில் மன்னிப்புக் கேட்டாள். அதன் பின்னர் நடிகர் சங்கம் எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று புகார் கூறினார்.

 

ஸ்ரீ ரெட்டி
ஸ்ரீ ரெட்டி

எல்லா துறைகளிலும் இருக்கிறது.

மேலும் திரைத்துறையில் கலைஞர்கள் பெண்களை படுக்கைக்கு அழைப்பது குறித்து பேசிய அவர், “ அந்த விஷயத்தில் சில பெண்கள் அப்போது தங்களை படுக்கைக்கு அழைத்தவர்களுடன் இணங்கிச் சென்று விட்டு, பின்னாளில் ஏதாவது ஒரு சம்பவத்தில், அவர்கள் மீது கோபமோ, வெறுப்போ ஏற்படும் போது, அதை பாலியல் குற்றச்சாட்டாக மாற்றுகிறார்கள்.

அது ஒரு தவறான அணுகுமுறை. ஒருவரின் பெயரை நீங்கள் கெடுக்க வேண்டும் என்றால், வெறுமனே நீங்கள் அவர் மீது பாலியல் ரீதியான குற்றச்சாட்டை வைத்தால் போதும். அது பற்றிக் கொண்டு எரியும். அந்த விவகாரம் என்ன நடந்தாலும், சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு ஆதரவாகவேச் செல்லும். நாம் ஆம்பளையாக அது குறித்து பேசும் பொழுது, யாரும் நம்மை நம்ப மாட்டார்கள்.

 

விஷால்
விஷால்

சினிமாவில் நிறைய உப்புமா கம்பெனிகள் இருக்கின்றன. அந்த கம்பெனிகளுக்கு இதுதான் வேலை. அவர்கள் நிச்சயமாக நடிக்க வரும் பெண்களிடம் பாலியல் ரீதியான சீண்டல்களில் ஈடுபடுகிறார்கள். இது எங்கே முடிவுக்கு வரும் என்றால், நடவடிக்கையை பெண்களாகிய நீங்கள், உடனடியாக தொடங்க வேண்டும்.

நீங்கள் அப்படி உடனடியாக நடவடிக்கை எடுக்கும் பொழுது, ஒரு ஆண் மகனுக்கு உங்கள் மீது பயம் வர ஆரம்பித்து விடும். இல்லையென்றால், நீங்கள் என்னிடம் இப்படி நடந்து கொண்டால் நான் நாளைக்கு திரைத்துறையில் இது குறித்து கூறி விடுவேன் என்று கூறினால் போதும். உங்கள் மீது தானாகவே நெருங்கும் நபருக்கு பயம் வந்துவிடும். இந்த பாலியல் ரீதியான விஷயங்கள் நம்முடைய கோலிவுத்துறை மட்டுமல்ல எல்லா துறைகளிலுமே இருக்கிறது. ஆனால் பெண்கள் இதை வெளியே சொல்வதற்கு பயப்படுகிறார்கள். அந்த பயம் நிச்சயமாக இருக்கக்கூடாது.” என்று பேசினார்

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.