Vishal: திருமணம் இல்ல.. ஆனால் மகள் உண்டு - விஷால் சொன்ன ஷாக் தகவல்
நடிகர் விஷால் தனது மகளை முதல் முறையாக அறிமுகம் செய்து வைத்தார்.
நடிகர் விஷால் நடித்து இருக்கும் மார்க் ஆண்டனி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் விஷால் குடும்பத்துடன் கலந்து கொண்டார்.
இந்த விழாவில் விஷால் பேசிய சில விஷயங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் கூறுகையில், " நான் இந்த பாப்பாவின் அப்பிலிகேஷனை பார்த்து தான் தேர்வு செய்தேன். எனக்கு ஒரு மகள் இருக்கிறார். அவரின் கோரிக்கை வித்தியாசமாக இருந்தது. ஸ்டெல்லா மேரிசில் படிக்க வேண்டும் என கூறினார். நானும் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிக்கு போன் செய்து ஒரு சீட் கேட்டேன் கொடுக்க முடியாது என கூறிவிட்டார்கள்.
ஒருவழியாக சீட் கொடுக்கிறேன், ஆனால் ஒரே ஒரு செமெஸ்டர் மட்டும் பார்ப்பேன், நன்றாக படிக்கவில்லை என்றால் வெளியே அனுப்பிவிடுவேன் என கண்டிஷனுடன் சீட் கொடுத்தார்கள். இப்போது என் மகள் தான், வகுப்பில் முதல் ரேங்க் எடுத்துள்ளார். மாதர் என்னிடம் அடுத்த ஆண்டு 2 சீட் கொடுப்பதாக சொல்லி இருக்கிறார்கள்” என்றனர்.
நடிகர் தனது மகளை மேடைக்கு அழைத்து ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார். விஷாலின் பேச்சு வைரலாக பரவியதால், அவரது ரசிகர்களும் ஆச்சரியமடைந்தனர். ஆனால் அது விஷாலுக்கு பிறந்த மகள் அல்ல, ஆனால் அந்த நடிகரிடம் படிக்கும் பெண்ணை அவரது மகள் என்று அழைத்தார்.
விஷால் திரைப்படங்கள் மட்டுமின்றி பல சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வருபவர். நிதி நெருக்கடியில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் மாணவர்களுக்காக விஷால் தலைமையில் பல தொண்டுகள் செய்யப்படுகின்றன. இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே அன்டன் மேரி என்ற மாணவியை விஷால் சந்தித்து கல்விச் செலவை ஏற்றுக்கொண்டார்.
கன்னியாகுமரி மீனவரின் மகள் ஆண்டன் மேரி. ஸ்டெல்லா மேரி கல்லூரியில் படிக்க வேண்டும் என்பது ஆண்டன் மேரியின் கனவாக இருந்தது. மேரியின் பொருளாதாரப் பிரச்னையை, தனது நண்பர் மூலம் அறிந்த ஆண்டன், படிப்பு மற்றும் இதர செலவுகளை ஏற்று கொண்டார்.
இது குறித்து ஆண்டன் மேரி கூறுகையில், “விஷாலை நான் தந்தையாகவே பார்க்கிறேன். அவர் படிக்க உதவியதற்காக அவருக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கேன். ஸ்டெல்லா மேரியில் படிக்க வேண்டும் என்பது எனது மிகப்பெரிய கனவு. இது ஒரு பெரிய கனவு. அவர் இல்லாமல் அது சாத்தியமில்லை என என் அம்மா கூறுவார். விஷால் மூலமாக அது சாத்தியமானது “ என்றார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்