Vinodhini: ‘சும்மா போயிட்டு இருந்தவர அடிச்சு போட்டுட்டான்.. ஒரு வருஷம் நான் பட்ட பாடு.. பிள்ளைங்கதான் பாவம்’ -விநோதினி-vinodhini latest interview about her husband accident and life struggle in kollywood cinema - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vinodhini: ‘சும்மா போயிட்டு இருந்தவர அடிச்சு போட்டுட்டான்.. ஒரு வருஷம் நான் பட்ட பாடு.. பிள்ளைங்கதான் பாவம்’ -விநோதினி

Vinodhini: ‘சும்மா போயிட்டு இருந்தவர அடிச்சு போட்டுட்டான்.. ஒரு வருஷம் நான் பட்ட பாடு.. பிள்ளைங்கதான் பாவம்’ -விநோதினி

Kalyani Pandiyan S HT Tamil
Aug 27, 2024 07:07 AM IST

Vinodhini: நம்முடைய வாழ்க்கையை நாம் தானே பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த சமயத்தில் அதனை சுற்றியுள்ளவர்கள் எங்களுக்கு மிகவும் அழுத்தமாக உணர வைத்தார்கள். - விநோதினி!

Vinodhini: ‘சும்மா போயிட்டு இருந்தவர அடிச்சு போட்டுட்டான்.. ஒரு வருஷம் நான் பட்ட பாடு.. பிள்ளைங்கதான் பாவம்’  -விநோதினி
Vinodhini: ‘சும்மா போயிட்டு இருந்தவர அடிச்சு போட்டுட்டான்.. ஒரு வருஷம் நான் பட்ட பாடு.. பிள்ளைங்கதான் பாவம்’ -விநோதினி (விகடன் )

கணவருக்கு ஏற்பட்ட விபத்து

இது குறித்து அவர் பேசும் போது, “ அவருக்கு திடீரென்று ஒரு நாள் விபத்து ஏற்பட்டு விட்டது. அந்த விபத்தின் போது யாரெல்லாம் நமக்கு உதவுவார்கள் என்று நினைத்தோமோ, அவர்கள் யாரும் எங்களுக்கு உதவவில்லை. ஆனால் நம்முடைய வாழ்க்கையை நாம் தானே பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த சமயத்தில் அதனை சுற்றியுள்ளவர்கள் எங்களுக்கு மிகவும் அழுத்தமாக உணர வைத்தார்கள்.

 

வினோதினி
வினோதினி

சில நண்பர்கள் மட்டும் வந்து அந்த சமயத்தில் எங்களுக்கு உதவினார்கள். நம்முடைய பிரச்சினையை நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு நாங்கள் அதற்கு தயாராகவே இருந்தோம். என்னுடைய கணவர் எதையோ நினைத்துக் கொண்டு ரோட்டில் வந்திருக்கிறார். ஆனால் தவறான திசையில் வாகனத்தில் வந்த நபர்கள் அவரை அடித்து போட்டு விட்டு சென்று விட்டார்கள். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், அவருக்கு யாரோ பணம் கொடுக்க வேண்டும். அவரிடம் சண்டை போட்டுக் கொண்டு திரும்பி வந்து கொண்டிருக்கிறார். அவர் சரியான திசையில் தான் வந்து கொண்டு இருந்தார்.

எந்த ஒரு தவறும் கிடையாது.

எதிர்த்தரப்பில் வந்தவர்கள் தான் தவறாக வந்து, அவரை அடித்து போட்டு விட்டு சென்று விட்டார்கள். அந்த விபத்தை பொறுத்தவரை அவர் மீது எந்த ஒரு தவறும் கிடையாது. உண்மையில் அந்த சமயத்தில் என்னை விட அவர் மிகவும் ஸ்ட்ராங்காக இருந்தார். அதனால்தான் அவரால் அந்த விபத்திலிருந்து வெளியே வர முடிந்தது. ஆரம்பத்தில் அவர் நடக்க முடியாமல் இருந்தார். ஆனால் ஒரு வருடத்தில் முயற்சி செய்து நடக்க ஆரம்பித்து விட்டார். அந்த சமயத்தில் நானும் அவ்வளவாக தாழ்ந்து போகவில்லை. எங்களுக்கு நேர்ந்ததை அப்படியே அனுமதித்துக் கொண்டு அவருக்கு அந்த சமயத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினேன்.

அவரையும் பார்த்துக் கொண்டேன். குடும்ப செலவுகளையும் கவனித்துக் கொண்டேன். பிள்ளைகளையும் பார்த்துக் கொண்டேன். கிட்டத்தட்ட ஒரு தனி மனுஷியாக குடும்பத்தை நடத்தி வந்தேன். முழுக்க முழுக்க இது சார்ந்த வேலைகளில் நான் மூழ்கி போயிருந்ததால். நமக்கு இப்படி நடந்து விட்டதே என்று கவலைப்படுவதற்கெல்லாம் நேரமில்லாமலேயே சென்று விட்டது. ஆரம்பத்தில் அவரால் நடக்க முடியாமல் இருந்தது. அது மட்டும் என்னுடைய குழந்தைகளுக்கு கொஞ்சம் வருத்தம் அளிப்பதாக இருந்தது. 

ஆனால் ஒரு வருடத்தில் அவர் நடக்க ஆரம்பித்ததும் அவர்களுக்கு நம்பிக்கை வந்து விட்டது. அந்த சமயத்தில் என்னுடைய பிள்ளைகள் மிகவும் சமத்தாக இருந்தார்கள் உண்மையில், அவர்களுக்கு நான் இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். எனது கணவரை இடித்தவர்கள் அடுத்த நாளே கோட்டிற்குச் சென்று, தவறை ஒப்புக்கொண்டு அதற்கான அபராதத்தை கட்டி விட்டு சென்று விட்டார்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.