Vin Diesel: "சுவற்றில் என்ன தள்ளிவிட்டு..!" வின் டீசலுக்கு எதிராக பாலியல் புகார் கூறிய உதவியாளர் - முழு விவரம்
ஹாலிவுட் நடிகர் வின் டீசலுக்கு எதிராக அவரது உதவியாளர் பாலியல் புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹாலிவுட் பட ஷூட்டிங்கின்போது இந்த சம்பவம் அரங்கேறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் என்ற ஹாலிவுட் படம் மூலம் இந்திய ரசிகர்கள் மத்தியும் பிரபலமானவர் வின் டீசல். இதையடுத்து அவர் மீது உதவியாளர் பாலியல் புகார் அளித்துள்ளார்.
வின் டீசலின் உதவியாளரான அஸ்டா ஜோனாசன், தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளார். 2010ஆம் ஆண்டில் அட்லாண்டாவில் வைத்து பாஸ்ட் பைவ் படப்பிடிப்ப செட்டில் வைத்து வின் டீசல் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக தற்போது 13 ஆண்டுகள் கழித்து வெளிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக லாஸ் ஏஞ்சலிஸில் வின் டீசலுக்கு எதிராக வழக்கும் தொடர்ந்துள்ளார்.
அஸ்டா ஜோனாசன் தனது மனுவில், "2010ஆம் ஆண்டு டீசல் தன்னை ஒரு ஹோட்டல் அறையின் சுவரில் மீது என்னை தள்ளிவிட்டு, தனது பிடியில் வைத்து கொண்டதுடன் என கண்முன்னே சுயஇன்பம் செய்ததாக" குற்றம் சாட்டியுள்ளார்.
அஸ்டா ஜோனாசன், வின் டீசலின் தயாரிப்பு நிறுவனமான ஒன் ரேஸ் புரொடக்ஷன் நிறுவனத்தில் உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். அவரது பணியாக வின் டீசலுக்கான மீட்டிங், சந்திப்புக்களை ஏற்பாடு செய்வது, புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பது போன்றவற்றை செய்வதாக இருந்துள்ளது.
ஹாலிவுட்டில் பிரபல நடிகராக இருந்து வரும் வின் டீசல் மீதான இந்த குற்றச்சாட்டு பரபரப்பை கிளப்பியுள்ளது.
இதற்கிடையே #MeToo, டைம்ஸ் அப் போன்ற இயக்கங்கள் காரணமாக இந்த புகாரை தைரியமாக கொடுக்க முன் வந்ததாக அஸ்டா ஜோனாசன் தெரிவித்துள்ளார்.
வின் டீசல் நடிப்பில் இந்த ஆண்டில் பாஸ்ட் எக்ஸ் திரைப்படம் கடந்த மே மாதத்தில் வெளியானது. ரசிகர்களை பெரிதும் கவர்ந்த இந்தப் படம் வசூல் வேட்டையும் நிகழ்த்தியது.
வின் டீசல் குரல் கொடுத்திருக்கும் ஆர்க்: தி அனிமேட்டட் சீரிஸ் வரும் 2024இல் வெளியாகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்