Raid Movie: இறுகப்பற்று, டாணாக்காரன் வரிசையில் ரெய்டு படம் இருக்கும் - விக்ரம் பிரபு
இறுகப்பற்று, டாணாக்காரன் வரிசையில் ரெய்டு படமும் இருக்கும் என நடிகர் விக்ரம் பிரபு தெரிவித்துள்ளார்.
இயக்குநர் முத்தையாவின் தங்கை மகன் கார்த்தி இயக்கத்தில் உருவான படம் தான் ரெய்டு. இப்படத்தில் விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா ஆகியோர் லீட் ரோல்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு உண்டான வசனத்தினை இயக்குநர் முத்தையா எழுதியுள்ளார். இப்படம் தீபாவளியை ஒட்டி வரும் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதன் இசை மற்றும் ட்ரெய்லர் சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது.
இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் விக்ரம் பிரபு கூறுகையில், 'கொஞ்ச நாட்களாகவே யூட்யூப் மாதிரியான சோசியல் மீடியாக்கள்ல நெகட்டிவிட்டி நிறைய பரப்பப்படுது. ஏன் இப்படியெல்லாம் நடக்குதுன்னு கூட யோசிப்பேன். ஆனா, இன்னிக்கு இந்தப்படம் நெகட்டிவிட்டி எப்படி பரப்பப்படுதுன்றதை வைச்சு தான் உருவாகி இருக்கு. இறுகப்பற்று படத்தின் வெற்றிக்கு உதவிய அனைவருக்கும் நன்றி. இறுகப்பற்று மாதிரியே ரெய்டு படமும் ஒரு வித்தியாசமான படம் தான்.
எனக்கும் ஒளிப்பதிவாளருக்கும் இடையில் சண்டையெல்லாம் இல்லை. மத்தவங்க விமர்சனம் செய்வதற்கு முன்பு, அதை நானே சரிசெஞ்சிட்டுப்போயிடுவேன். இறுகப்பற்று, டாணாக்காரன் ஒரு வித ஜானர் என்றால், ரெய்டு வேறுவிதமான ஜானரில் அமைந்த வித்தியாசமான படம்’ என்றார்.
விழாவில் பேசிய இயக்குநர் முத்தையா, ' நான் மண்சார்ந்த படங்களையே எடுத்துள்ளேன். இப்போ வரைக்கும் 8 படங்கள் எடுத்திருக்கேன். சிட்டி பேஸ்ல ஒரு படம் பண்ணலாம்னு தெலுங்கு படமானா ‘டகரு’ படத்தின் உரிமையை வாங்கி வைச்சிருந்தேன். அப்போ, இந்த கதைக்காக நடிகர்களைத் தேடும்போது, விக்ரம் பிரபு மட்டும் தான் இந்த கதை நல்லாயிருக்குன்னு சொன்னார். என்னால் பண்ண முடியாத சூழல் இருந்துச்சு. உடனே,இதை என் தங்கச்சி மகன் கார்த்திக்கை எடுக்கச் சொன்னேன். இந்த மேடை டைரக்டர் கார்த்திக்குண்டான மேடை. தீபாவளியை ஒட்டி இந்தப்படம் ரிலீஸாகிறதுக்கு டைரக்டர் கார்த்தி கொடுத்து வைச்சிருக்கணும்’ என்றார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்