விக்ரம் படத்தின் ட்ராக் லிஸ்ட் வெளியீடு!
விக்ரம் படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம் பெற்றுள்ளது.
நடிகர் கமல் ஹாசன் நடித்து இருக்கும், ’விக்ரம்’ படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இதில் விஜய் சேதுபதி, பகத் பாசில், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். அத்துடன் படத்தின் சிறப்புத் தோற்றத்தில் நடிகர் சூர்யா நடித்து அசத்தி இருக்கிறார்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீடு ஆகியவை சென்னை நேரு விளையாட்டரங்கத்தில் பிரமாண்டமாக தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இசை வெளியீட்டிற்கு முன்பாக படத்தின் ஆல்பத்தில் இடம் பெற்று இருக்கும் அனைத்து பாட
\
ல்களின் பட்டியலை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டு உள்ளார்.
அதன்படி படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் இடம் பெற்று இருக்கிறது. பத்தல பத்தல, விக்ரம், வேஸ்ட்டு, போர்கண்டா சிங், once upon a time ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளது.
ஏற்கனவே விக்ரம் படத்தில் இடம் பெற்று இருக்கும், ‘பத்தல பத்தல’ பாடலை நடிகர் கமல் ஹாசன் எழுதி, அவரே பாடி உள்ளார். போர்கண்ட சிங்கம் மற்றும் விக்ரம் டைட்டில் பாடலை விஷ்ணு எடாவனும் ஆகிய பாடல்களை எழுதி உள்ளார். இதில் போர்கண்ட சிங்கம் பாடலை ரவி ஜி பாட இருக்கிறார். மேலும் இருக்கும் மூன்று பாடல்களை அனிருத் பாடி உள்ளார் .
டாபிக்ஸ்