RIP Captain Vijayakanth: 'அள்ளிக் கொடுத்தவன்.. வெற்றி கொடி நாட்டியவன் விஜயகாந்த்' பாரதிராஜா இரங்கல்
RIP Captain:
Captain Vijayakanth Passed Away: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தேமுதிக நிறுவனத் தலைவா் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தாா். மியாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு திரை உலகினர், ரசிகர்கள் தொண்டர்கள் என பல தரப்பினரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் உடல் நிலை சரி இல்லாத இயக்குநர் பாரதிராஜா இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளர். அதில் அவர் கூறி உள்ளதாவது,
இனிய நண்பர்களே.. தோழர்களே.. உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன்..
சில நேரங்களில் சில விஷயங்களை சந்தோஷமாக பகிர்ந்து கொள்ள வேண்டி இருக்கிறது. சில நேரங்களில் சில விஷயங்களை வருத்தத்தோடு பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இயற்கை மனிதனைக் கொண்டு செல்வது நியாயம் தான். பிரயோஜனமான சில மனிதர்களை கொண்டு செல்வது தான் ரொம்ப கஷ்டம். என் நண்பன்.. அது மட்டுமல்ல சிறந்த கலைஞன்.. சிறந்த மனிதாபிமானி.. அவன் வீட்டிற்குச் சென்று பசியாறி வராதவர்கள் யாரும் கிடையாது. அத்தகைய ஒரு நல்ல கலைஞன்.
பல நாட்களாக எந்த விதமான மூவ்மெண்ட்டும் இல்லாமல் இருக்கும்போது தமிழ்நாடு முழுவதும், உலகம் முழுவதும் வருத்தப்படுகிறதே.. ஏனென்றால் ஒரு நல்ல கலைஞன் இப்படி எதுவும் ஆகிவிடக் கூடாது என்று நினைத்தோம். எது நடக்கக் கூடாதோ அது நடந்து விட்டது. இருந்தாலும் அவன் வீட்டுக்கு சென்று சாப்பிடாதவர்கள் கிடையாது. அவன் வீட்டிற்குச் சென்று தரிசிக்காதவர்கள் கிடையாது.
நல்ல மனைவி, நல்ல பிள்ளைகள், ரசிகர்கள் இவ்வளவு சீக்கிரமாக அவரை கடவுள் அழைத்துக்கொள்வார் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. ஆனால் அது கஷ்டமா இருக்கு. காலை செய்தி கேட்ட உடனே மிகவிம் வருத்தமாக இருந்தது. அவன் கலைஞர் மட்டுமல்ல, மிகச் சிறந்த பைட்டர். நல்ல இரக்க சிந்தனையாளன்.
சினிமா நடிகர்கள் சம்பாதிக்கலாம் ஆனால் சம்பாதித்து அள்ளிக் கொடுத்தவன் விஜயகாந்த். அவனுடன் ஒரு படம் தான் செய்திருக்கிறேன். ஆனால் அந்த ஒரு படத்தில் என் அனுபவம் வித்தியாசமானது. விஜயகாந்த் பழகிப் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும் அவன் எவ்வளவு பெரிய மனிதன் என்று.
அத்தகைய மனிதன் மறைவு என்பது தமிழகத்திற்கு மட்டுமல்ல உலக தமிழர்கள் அத்தனை பேருக்கும் பெரிய இழப்பு. என்ன செய்வது இந்த நேரங்களில். இயற்கையின் தவிர்க்க முடியாத ஒன்று. என்னால் உடல்நி லை சரி இல்லாததால் அங்கு செல்ல முடியவில்லை. பாரதிராஜாவாக ஆக்டிவாக நடத்து சென்று பார்க்க முடியவில்லை என்ற கவலை இருக்கிறது.
விஜயகாந்த் வெற்றி கொடி நாட்டியவன். விஜயகாந்த் தம் நடிப்பால் உயர்ந்தவன். விஜயகாந்த் மனிதத் தன்மையால் உயர்ந்தவன். அவனுடைய ஆத்மா சாந்தியடைய என் வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவருடைய ரசிகர்களுக்கு நான் கூறுவது எல்லாம் நீங்கள் எதையும் செய்ய வேண்டாம் விஜயகாந்த். மனிதர்களுக்காக என்ன செய்தாரோ அதை செய்தாலே போதும். அவன் ஆத்மா சாந்தி அடைய நான் கடவுளை பிராத்திக்கிறேன்." இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
டாபிக்ஸ்