23 Years of Simmasanam: ஐந்து ஹீரோயின்கள்! விஜயகாந்துக்கு வில்லனாக விஜயகாந்த் - மாறுபட்ட நடிப்பில் தூள் கிளப்பிய படம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  23 Years Of Simmasanam: ஐந்து ஹீரோயின்கள்! விஜயகாந்துக்கு வில்லனாக விஜயகாந்த் - மாறுபட்ட நடிப்பில் தூள் கிளப்பிய படம்

23 Years of Simmasanam: ஐந்து ஹீரோயின்கள்! விஜயகாந்துக்கு வில்லனாக விஜயகாந்த் - மாறுபட்ட நடிப்பில் தூள் கிளப்பிய படம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 04, 2023 04:45 AM IST

ட்ரிபிள் ஆக்டிங்கில் விஜயகாந்த், ஜோடியாக இரண்டு கதாநாயகிகள், இரண்டு பெண்டாட்டி என பல்வேறு சர்ப்ரைஸ்களை கொண்ட படமாக வெளியாகியிருந்த சிம்மாசனம் கலவையான விமர்சனங்களுடன் ஆவரேஜ் ஹிட் படமாக அமைந்தது.

சிம்மாசனம் படத்தில் விஜயகாந்த், மந்த்ரா, ராதிகா செளத்ரி
சிம்மாசனம் படத்தில் விஜயகாந்த், மந்த்ரா, ராதிகா செளத்ரி

அந்த வகையில் சிம்மாசனம் திரைப்படம் இரண்டாவது பார்மூலாவை சேர்ந்ததாக இருந்தது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் வரிசையில் அதிக ரசிகர்கள் கூட்டத்தை கொண்ட ஹீரோவாக இருந்த விஜயகாந்த், அவர்களை திருப்தி படுத்தும் விதாமாகவும், அதே சமயம் குடும்பத்துடன் பார்க்கும் விதமாகவும் கதைகளுக்கே முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்தார்.

அந்த வகையில் கண்ணுபடபோகுதய்யா படத்தின் ஹிட் மூலம் அதே பாணியில் கிராமத்து பின்னணியில் குடும்ப சென்டிமென்ட் ஆக்‌ஷன் கலந்த படமாக சிம்மாசனம் படத்தில் நடித்திருந்தார். தந்தை, அண்ணன், தம்பி என மூன்று கேரக்டர்களில் தோன்றி சர்ப்ரைஸ் கொடுத்திருப்பார் விஜயகாந்த்.  மூன்று கதாபாத்திரங்களுக்கு ஏற்ப கெட்டப்பில் பெரிதாக மாற்றம் செய்யவில்லை என்றாலும் அதிரடி, குறும்பு, சாந்தம் கேரக்டரில் வெரைட்டி காட்டியிருப்பார் விஜயகாந்த். 

இதில் அண்ணன் விஜயகாந்துக்கு ஜோடியாக குஷ்பு, தம்பி விஜயகாந்தை துரத்தி காதலிக்கு கதாபாத்திரத்தில் இளம் ஹீரோயின்களான மந்த்ரா, ராதிகா செளத்ரி நடித்திருப்பார்கள்.

இதுதவிர தந்தை விஜயகாந்துக்கு ஜோடியாக அம்பிகா, விஜி என இரண்டு ஹீரோயின்கள். அநேகமாக விஜயகாந்த் ஜோடியாக அதிக ஹீரோயின்கள் நடித்த படம் இதுவாகத்தான் இருக்கும். சொத்துப்பிரச்னை என தமிழ் சினிமா ரசிகர்கள் பார்த்து பழகிய கதையம்சத்தில் தொடங்கினாலும் பின்னர் போக போக திரைக்கதையில் வரும் டுவிஸ்ட் சிறந்த பொழுதுபோக்கு படத்தை பார்க்கும் உணர்வை ஏற்படுத்தும் என்பதை உறுதியாக கூறலாம்.

அறிமுக இயக்குநர் ஈஸ்வரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். படத்தின் பாடல்களை பொறுத்தவரை வாலி பாடல் வரிகளுக்கு எஸ்ஏ ராஜ்குமார் இசையமைத்திருப்பார். விஜயகாந்த், மந்த்ரா, ராதிகா செளத்ரி இடம்பெறும் மஞ்ச மஞ்ச கிழங்கு என்ற பாடல் ஹிட்டடித்தது.

விஜயகாந்தே விஜயகாந்துக்கு வில்லனாக வரும் விதமாக படத்தின் திரைக்கதை அமைத்து, இரண்டு விஜயகாந்துக்கு இடையே சண்டை காட்சி ஒன்றையும் வைத்து தூள் கிளப்பியிருப்பார்கள். படம் வெளியான சமயத்தில் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும், வசூலில் பெரிய குறை வைக்காமல் ஆவரேஜ் ஹிட் படமாக ஓடிய சிம்மாசனம் வெளியாகி இன்றுடன் 23 ஆண்டுகள் ஆகிறது.

இந்த படத்துக்கு முன்னர் இதே ஆண்டில் வானத்தைபோல, வல்லரசு என இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருந்தார் விஜயகாந்த்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.