Vijaya Shanthi: ஒரே ஆபாசம்.. தணிக்கை தேவை - விஜய சாந்தி
ஓடிடி தளங்களுக்கும் தணிக்கை தேவை என விஜய சாந்தி கேட்டு கொண்டு உள்ளார்.
விக்டரி வெங்கடேஷ் மற்றும் ராணா டக்குபதி நடித்துள்ள வெப் சீரிஸ் ராணா நாயுடு . அமெரிக்க தொலைக்காட்சி தொடரான ரே டோனவனின் இந்தியத் தழுவலாக வெளியாகி உள்ளது.
கரண் அன்சுமான் மற்றும் சுபர்ன் வர்மா இணைந்து இயக்கியுள்ளனர். இந்தத் தொடரை லோகோமோட்டிவ் குளோபல் மீடியாவின் பதாகையின் கீழ் சுந்தர் ஆரோன் தயாரித்துள்ளார். இதில் சுர்வீன் சாவ்லா, சுஷாந்த் சிங், ஆஷிஷ் வித்யார்த்தி, கௌரவ் சோப்ரா, சுசித்ரா பிள்ளை மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
உலகம் முழுவதும் நெட்ஃபிளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட ஆங்கிலம் அல்லாத தொடர்களில் இது 10வது இடத்தில் உள்ளது. . இந்த வெப் சீரிஸில் அதிக அளவு ஆபாசக் காட்சிகள் இடம்பெற்றிருந்ததால் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகையும், அரசியல் வாதியுமான விஜய் சாந்தி ஓடிடியில் வெளியான வெப் சீரிஸில் ஆபாச காட்சிகள் அதிகரித்து கொண்டே வருகிறது என்று குற்றம் சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “ ஓடிடியில் சமீபத்தில் வெளியான ராணா நாயுடு வெப் சீரிஸில் அதிக அளவில் ஆபாச காட்சிகள் இடம் பெற்றிருந்தது. தற்போது ஓடிடியில் வெளியாகும் வெப் சீரிஸ்களில் ஆபாச காட்சிகள் அதிகரித்து கொண்டே வருகின்றன.
ஓடிடியில் வெளியாகும் வெப் சீரிஸ்களுக்கும் ஏன் தணிக்கை வேண்டும் என மக்கள் வலியுறுத்துகிறார்கள் என்று இப்போது எனக்குப் புரிகிறது.
நடிகர்களும், நடிகைகளும் இது போன்ற பிரச்னைகளைப் புரிந்து கொண்டு நடிக்க வேண்டும். பார்வையாளர்கள் உங்களுக்கு நிறைய அன்பையும், மரியாதையையும் கொடுத்திருக்கிறார்கள். அதை நீங்கள் நிலைநிறுத்த வேண்டும் என நான் நினைக்கிறேன் " என கூறினார்.
ராணா நாயுடு வெப் சீரிஸை தான் விஜய சாந்தி பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக குற்றம்சாட்டி உள்ளார் என சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்