GOAT Box Office: தொடரும் விமர்சனங்கள்.. 7 நாள் முடிவில் தி கோட் பட வசூல் சாதனை செய்ததா?-vijay the goat movie box office collection on world wide on day 7 - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Goat Box Office: தொடரும் விமர்சனங்கள்.. 7 நாள் முடிவில் தி கோட் பட வசூல் சாதனை செய்ததா?

GOAT Box Office: தொடரும் விமர்சனங்கள்.. 7 நாள் முடிவில் தி கோட் பட வசூல் சாதனை செய்ததா?

Aarthi Balaji HT Tamil
Sep 12, 2024 10:03 AM IST

GOAT Box Office: தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் இன் தமிழ் பதிப்பு செப்டம்பர் 11 அன்று 27. 80 சதவீதத்தை ஒட்டுமொத்தமாகப் பதிவு செய்தது.

GOAT Box Office: தொடரும் விமர்சனங்கள்.. 7 நாள் முடிவில் தி கோட் பட வசூல் சாதனை செய்ததா?
GOAT Box Office: தொடரும் விமர்சனங்கள்.. 7 நாள் முடிவில் தி கோட் பட வசூல் சாதனை செய்ததா?

செப்டம்பர் 11 அன்று, தி கோட் படம், சிறிது சரிவைக் கண்டது. இந்தியாவில் சுமார் 8 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. படத்தின் மிகக் குறைந்த வசூல் இதுவாக இருந்தாலும், வார இறுதியில் ஏற்றம் காணும் என நம்பப்படுகிறது. ஏழு நாள் மொத்த வசூல் இப்போது இந்தியாவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ 170. 75 கோடியாக உள்ளது என்று கண்காணிப்பு இணையதளம் சாக்னில்க் தெரிவித்துள்ளது.

தி கோட் பட வசூல்

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் இன் தமிழ் பதிப்பு செப்டம்பர் 11 அன்று 27. 80 சதவீதத்தை ஒட்டுமொத்தமாகப் பதிவு செய்தது. மாலை மற்றும் இரவு நிகழ்ச்சிகள் 37. 86 சதவீதம் மற்றும் 30. 99 சதவீதம் வசூல் செய்து இருக்கிறது.

நாள் வாரியான வசூல்

முதல் நாள்: ரூ 44 கோடி

நாள் 2: 25.5 கோடி

நாள் 3: ரூ.33.5 கோடி

நாள் 4: ரூ.34 கோடி

நாள் 5: ரூ.14.75 கோடி

நாள் 6: ரூ.11 கோடி

நாள் 7: ரூ. 8 கோடி

மொத்தம்: ரூ.170.75 கோடி

தி கோட் படத்தின் கதை

கென்யாவில் ரயிலில் கொண்டு செல்லப்படும் யுரேனியத்தையும், பயங்கவாதி ஓபரையும் பத்திரமாக கொண்டு வர Special Anti terrorist squad team சார்பில் காந்தி ( விஜய்), அஜய் (அஜ்மல்), சுனில் (பிரசாந்த்), கல்யாண் ( பிரபு தேவா) ஆகியோர் கொண்டு செல்ல ஆயுதங்களுடன் களமிறங்க, அந்த சண்டையில் ரயில் வெடித்து தீவிரவாதி மேனன் ( மோகன்) இறந்துவிடுவதாக காட்டப்படுகிறது.

இதற்கிடையே தாய்லாந்திற்கு மனைவி அனு ( சினேகா) உடன் செல்லும் காந்தி, தன்னுடைய மகனைப் பறி கொடுப்பதாக காட்டப்படுகிறது. ஆனால், பின்னாளில் அவனை காந்தி பிரச்சினை ஒன்றில் சந்திக்கிறார். அந்தப் பிரச்சினை என்ன? அதில் காந்திக்கு வில்லனாக மகன் மாறியது ஏன்? என்பது படத்தின் மீதிக்கதை.

இரட்டை வேடத்தில் விஜய்

‘தி கோட்’ திரைப்படத்தில் நடிகர் விஜய் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். இதற்கு முன்பு, நடிகர் விஜய், அழகிய தமிழ் மகன், வில்லு, கத்தி, மெர்சல்,பிகில், லியோ ஆகியப் படங்களில் இரட்டை வேடங்களில் நடித்திருந்த நிலையில் தற்போதும் இரட்டை வேடத்தில் நடித்து இருக்கிறார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.