“வாழ்க்கை ஈசி இல்ல.. அடிச்சா வாங்கிட்டு போற பொண்ணு நான் இல்ல.. திருப்பி கொடுப்பேன்” - அர்னவ் முன்னாள் மனைவி திவ்யா
அர்னவ் முன்னாள் மனைவி திவ்யா அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில்,நேற்று நடைபெற்ற எலிமினேஷனில் சீரியல் நடிகர் அர்னவ் வெளியேற்றப்பட்டார். வீட்டிற்குள் என்ட்ரி ஆன முதல் நாளே, விஜய் சேதுபதியிடம் வாயைக்கொடுத்து மாட்டிக்கொண்டது, குழுவினருடன் ஒட்டாமல் தனித்து இருந்தது, அன்ஷிதாவிற்கு 'செம்பு தூக்கி ' என்ற பட்டத்தைக்கொடுத்து அவரை கண் கலங்க வைத்தது.
அதில் ஏற்பட்ட வாக்குவாதம், அதன் பின்னர் அவர் நடந்து கொண்ட விதம் உள்ளிட்டவை மக்கள் மத்தியில் அவர் மீது அவமதிப்பை உண்டாக்கி விட்டது. கூடவே சக போட்டியாளர்களும் அவரை நாமினேஷனில் வைத்து மொத்தமாக குத்த அவர்தான் வெளியே செல்வார் என்பது அப்போதே உறுதியாகிவிட்டது.
இந்த நிலையில் அர்னவின் வாழ்க்கையில் அன்ஷிதா வந்த காரணத்தால், மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்த அவரது முன்னாள் மனைவி திவ்யா, அர்னவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தன்னுடைய குழந்தையோடு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அவர் வெளியிட்ட வீடியோவில், தனுஷ் நடித்த தங்கமகன் திரைப்படத்தில் எமி ஜாக்சன் அவரது கணவரை திருப்பி அடிக்கும் பின்னணியை வைத்து, அதில் எமி பேசும் வசனங்களான "நீ அடித்தால் வாங்கிக்கொண்டு போகும் பெண் நான் அல்ல.. திருப்பி விழும்" என்பதை அவர் பேசுவது போல பேசி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
மேலும் அவர், “ வாழ்க்கை எளிதானது அல்ல, ஆனால் வழியில் கற்றுக்கொண்ட பாடங்கள் அதை பயனுள்ளதாக்குகின்றன.” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
முன்னதாக, இந்த விவகாரம் குறித்து நடிகை அனுராதா கலாட்டா சேனலுக்கு அண்மையில் பேசி இருந்தார்.
யாருடா செம்பு தூக்கி?
இது குறித்து அவர் பேசும் போது, “உண்மையில் அர்னவும், அன்ஷிதாவும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். நாங்கள் நெருக்கமாகதான் இருந்தோம். அர்னவின் உண்மையான முகம் தெரிந்த உடன் நான் அவன் உறவில் இருந்து விலகிவிட்டேன். அர்னவ், ‘செம்பு தூக்கி’ டேக்கை அன்ஷிதாவிற்கு கொடுக்கும் முடிவு அணி சார்பில் எடுக்கப்பட்டது எனக் கூறியது மிக மிக தவறு.
உண்மையில் அர்னவ் ‘செம்பு தூக்கி’ டேக்கை அன்ஷிதாவிற்கு தான் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான். இதை சக போட்டியாளர்கள், இதில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா.. அன்ஷிதாவிற்கு நீங்கள்தான் கொடுக்க வேண்டுமா என்று கேட்டபோதும் கூட, நான் உறுதியாக இருக்கிறேன். இதை அன்ஷிகாவிற்குதான் கொடுக்க வேண்டும் என்று அர்னவ் கூறினான். அந்த விஷயத்தில், அர்னவிடம் அன்ஷிதா கேட்ட விஷயம் மிகவும் சரியானது.
அன்ஷிதா யார்
காரணம் என்னவென்றால், அன்ஷிதா யார் என்பது அர்னவிற்கு நன்றாகவே தெரியும். கிட்டத்தட்ட 24 மணி நேரத்தில் 16 முதல் 18 மணி வரை அவர்கள் பேசிக் கொண்டுதான் இருப்பார்கள். ஷூட்டிங் ஸ்பாட்டில் அவருக்காக இவரும், இவருக்காக அவரும் பலமுறை பலரிடம் சண்டை போட்டு இருக்கிறார்கள்.
அவள் வெளியேசில பேருக்கு செம்பு தூக்கிதான் நான் நிறைய வாங்கி கட்டிக் கொண்டேன் என்று கூறினாள். அது முழுக்க முழுக்க அர்னவை குறிப்பிட்டுதான் அவள் கூறினாள். செல்லம்மா சீரியலின் ஹீரோயின் என்ற அடையாளம் பெற்ற பின்னர், அர்னவ் திவ்யா இடையிலான பிரச்சினையில் தலையிட்டு, அதில் அவள் பேசிய ஆடியோ லீக் அனது. அதில்தான் அவள் பெயர் கெட்டுப் போய்விட்டது
மனைவி உடனான பிரச்சினையில் அர்னவ், அன்ஷிதாவும் வேண்டும். மனைவியும் வேண்டும் என்று இருந்தான். அப்படி இரண்டு மாடுகளை ஒரே வண்டியில் ஓட்ட முடியாது. நம் கலாச்சாரத்திற்கு அது செட் ஆகாது. ஒரு பேட்டியில் கூட, நான் முஸ்லிம் என்பதால் எத்தனை கல்யாணம் வேண்டும் என்றாலும் செய்யலாம் என்று அர்னவ் கூறி இருந்தான் . ஆனால், இன்றைய வாழ்க்கை அது கிடையாது.” என்று பேசினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்