புல்லாங்குழல் .... ஃபுட்பால் ... விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி என்ன தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  புல்லாங்குழல் .... ஃபுட்பால் ... விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி என்ன தெரியுமா?

புல்லாங்குழல் .... ஃபுட்பால் ... விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி என்ன தெரியுமா?

Aarthi V HT Tamil
Apr 11, 2022 07:15 AM IST

நடிகர் விஜய் கூறிய குட்டி ஸ்டோரி அவரது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று உள்ளது.

<p>விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி</p>
<p>விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி</p>

இந்த நிலையில் ரசிகர்களுக்குப் பெரிய விருந்தே சன் பிக்சர்ஸ் நிறுவனம் வைத்து விட்டது . 10 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் , ’ பீஸ்ட் ‘ திரைப்படத்திற்காகப் பேட்டி அளித்து இருக்கிறார் . இயக்குநர் நெல்சன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார் .

இதனிடையே விஜய் அதில் குட்டி ஸ்டோரி ஒன்றை கூறி உள்ளார் . அவர் கூறியதாவதது , ” புல்லாங்குழல் .... ஃபுட்பால் ... இரண்டும் சந்தித்து கொள்கிறது . 

அப்போது ஃபுட்பால் , புல்லாங்குழலைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டது . நம் இரண்டு பேரிடமும் காற்று தான் இருக்கிறது. ஆனால் என்னை அனைவரும் காலால் எட்டு உதைக்கின்றனர் . ஆனால் உன்னை மட்டும் முத்தமிடுகின்றனர் .

அதற்கு புல்லாங்குழல் , என்னிடம் இருக்கும் காற்றை வைத்து நான் வெளியே இசையாகக் கொடுக்கிறேன் . ஆனால் நீ உனக்கு வரும் காற்றை உள்ளே அடைத்து வைத்து கொண்டு யாருக்கும் கொடுப்பதில்லை . அதனால் தான் அனைவரும் உன்னைக் காலில் போட்டு மிதிக்கின்றனர் . 

இப்படி செய்தால் யாரும் உனக்கு முத்தம் கொடுக்க மாட்டார்கள் என கூறியதாம் . இதன் மூலம் நமக்கு கிடைக்கும் பொருளை நாமே பயன்படுத்தக் கூடாது என்றும் , அனைவருக்கும் கொடுக்க வேண்டும் “ என விஜய் கூறினார் . இந்த குட்டி ஸ்டோரியை கேட்டு ஒன்று புரியாமல் இயக்குநர் நெல்சன் , ‘ எங்கு இருந்து இது போன்ற கேள்விகளை நீங்கள் யோசிக்கிறீர்கள்? “ என கேட்டார் .

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.