Vijay Theri Song: ‘தெறி பேபி’.. ஆங்கில வெப் சீரிஸில் இடம் பெற்ற விஜயின் பாடல்.. முழு விபரம் இங்கே!
கடந்த 2016 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் அட்லி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘தெறி’. இந்தப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் ஆகியோர் நடித்திருந்தனர். பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்து இருந்தார்.
நடிகர் விஜயின் படங்களில் இடம் பெறும் பாடல்கள் தற்போது உலக அளவில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன. அதற்கு உதாரணங்களாக மாஸ்டர் படத்தில் இடம் பெற்ற ‘வாத்தி கம்மிங்’, பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற ‘அரபிக்குத்து’ வாரிசு படத்தில் இடம் பெற்ற ‘ரஞ்சிதமே’ உள்ளிட்ட பாடல்களை சொல்லலாம்.
இந்த நிலையில் தற்போது விஜயின் படத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்று ஆங்கில சீரிஸ் ஒன்றில் இடம் பிடித்து அவரது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி இருக்கிறது. அது என்ன பாடல்? எந்த ஆங்கில சீரிஸில் அந்தப்பாடல் இடம் பெற்று இருக்கிறது உள்ளிட்ட விபரங்களை பார்க்கலாம்.
கடந்த 2016 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் அட்லி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘தெறி’. இந்தப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் ஆகியோர் நடித்திருந்தனர். பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்து இருந்தார்.
இந்தப்படத்தில் இடம் பெற்றிருந்த அனைத்து பாடல்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக விஜய்க்கும் சமந்தாவுக்கு இடையேயான காதல் மற்றும் கல்யாண வாழ்க்கையை ‘என் ஜீவன்’ என்ற பாடலில் மிக அருமையாக காட்சிப்படுத்தி இருப்பார் இயக்குநர் அட்லி.
இந்தப்பாடலை பாடலாசியர்கள் நா. முத்துகுமாரும், ஆர். தியாகராஜனும் எழுதியிருந்தனர். ஹரிஹரன், சைந்தவி, வைக்கம் விஜயலட்சுமி ஆகியோர் இந்தப்பாடலை பாடியிருந்தனர். மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்தப்பாடல் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ‘நெவர் ஹெவ் ஐ எவர்’ சீசன் 4 -ல் இடம் பெற்று இருக்கிறது. இதனை விஜய் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
டாபிக்ஸ்