ரத்ததானம் செய்ய செயலி - அசத்தும் விஜய் மக்கள் இயக்கம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ரத்ததானம் செய்ய செயலி - அசத்தும் விஜய் மக்கள் இயக்கம்

ரத்ததானம் செய்ய செயலி - அசத்தும் விஜய் மக்கள் இயக்கம்

Aarthi V HT Tamil
Jul 06, 2022 06:04 PM IST

நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ரத்ததானம் செய்ய செயலி உருவாக்கப்பட்டுள்ளது

<p>விஜய்</p>
<p>விஜய்</p>

இது குறித்து நடிகர் விஜய் அவர்களின் ஆணையின்படி மக்கள் சேவைகளில் தளபதியின் உயிருக்கு உயிரான ரசிகர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. அப்படிப்பட்ட லட்சக்கணக்கான இளைஞர்கள் அனைவரின் சக்தியை மக்களுக்கு பயனுள்ள வகையில் மாற்றும் விதமாக ரத்த தானம் செய்யும் முயற்சியாக தளபதி விஜய் குருதியாகம் என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய செயலி மூலமாக லட்சக்கணக்கான இளைஞர்களை தன்னார்வலர்களாக இணைத்து தமிழக முழுவதும் உள்ள அனைத்து மாவட்டத்திலும் அனைத்து பகுதிகளிலும் ரத்ததான சேவையை மக்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளோம்.

அது மட்டுமல்லாமல் இந்த செயலில் ரத்த தானம் கொடுப்பதற்கு இணைந்து கொள்ளவும், ரத்த தானம் தேவைப்படும்முன் வருபவர்கள் இணைந்து கொள்வதற்கும் பயனாளர்கள் பயன்பெறவும் உறுதுணையாக இருக்கும். 

தானத்தின் சிறந்த தானம் ரத்த தானம் என்ற வகையில் விலைமதிப்பற்ற பல உயிர்களை காக்கும் பொறுப்பை தனது ரசிகர்களான தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் வழங்கி வழிநடத்த இந்த செயலி உறுதுணையாக இருக்கும் என்பதை தளபதியின் சார்பாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 

மேலும் விஜய் மக்கள் இயக்கத்தின் அதிகாரப்பூர்வமான முகநூல், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், யூடியூப் மட்டும் இணையதளம் பக்கங்களை இன்று அறிமுகம் செய்துள்ளோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.