Bharath Jayanth: ‘முதலுதவி சிகிச்சை கூட கொடுக்கல; அம்மா உடம்ப வெச்சி காசு பாத்தாங்க’ - விஜய் பட நடிகரின் சோக கதை!
இது மாதிரியான அடிப்படையான விஷயங்களை எல்லோருமே தெரிந்து வைத்திருக்க வேண்டும். காரணம் யாருக்கு எப்போது பிரச்சினை வரும் என்று தெரியாது.இங்கிருந்து பக்கத்து கட்டிடம் தான் அந்த மருத்துவமனை.
நடிகர் விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணன் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான ஃப்ரண்ட்ஸ் படத்தில் குட்டி விஜயாக நடித்து பிரபலமானவர் நடிகர் பரத் ஜெயந்த். அதனைத்தொடர்ந்து ‘வானத்தை போல’ ‘பிரியமான தோழி’ உள்ளிட்ட படங்களிலும், ‘ஷக்கலக்க பூம் பூம்’ உள்ளிட்ட பல தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து பிரபலமானார். அதன் பின்னர் நடிப்புக்கு முழுக்கு போட்ட அவர் படிப்பில் கவனம் செலுத்த தொடங்கினார்.
லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்த பரத் ஜெயந்த், சிறிது காலம் மாடலாகவும் வலம் வந்தார். பின்னர், இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில் ‘இளமை நாட்கள்’என்ற படத்தில் நடித்தார்.
அதனைத்தொடர்ந்து அதர்வா-நயன்தாரா வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் உதவி இயக்குநராகவும் வேலை செய்தார். அதனை தொடர்ந்து படங்களுக்கு முயற்சி செய்யாமல் தற்போது குட்டியானையில் ஐஸ் விற்கும் தொழிலில் கவனம் செலுத்தி தற்போது பிஸினஸ் மேனாக வலம் வருகிறார். இந்த நிலையில் அண்மையில் அவரது கொடுத்த பேட்டி ஒன்றில் அவரது அம்மாவின் இறப்பு குறித்து மிகவும் நெகிழ்ச்சியாக பேசியிருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, "சிறுவயதில் சில படங்களில் நடித்தேன். ஆனால் அதன் பின்னர் பெரிதான வாய்ப்புகள் ஏதும் வரவில்லை. சரி இதையே நம்பி உட்கார்ந்திருக்க வேண்டாம் என்று சொல்லி படிப்பில் என்னுடைய கவனத்தை திருப்பினேன்.
அப்போதே எனக்கு இந்த மாதிரியான பிசினஸ் செய்ய வேண்டும் என்ற ஐடியா இருந்தது. அம்மா அப்பா இருவருமே தவறிவிட்டார்கள். என்னுடைய அம்மாவை என்னுடைய அப்பா சிறு வயதிலேயே விட்டுவிட்டுச் சென்று விட்டார். அம்மா என்னை தனியாக தான் வளர்த்தார்.
அம்மா இறந்து கிட்டத்தட்ட எட்டு வருஷங்கள் ஆகின்றன.அப்பா இருந்து கிட்டத்தட்ட நான்கு வருஷங்கள் ஆகின்றன. அப்பா இறந்தபோது எனக்கு பெரிதாக ஒன்றும் கஷ்டமாக தெரியவில்லை. அம்மா இறந்த போது தான் நான் மிகவும் வருத்தப்பட்டேன். எனக்கு எல்லாமுமாக அவர்தான் இருந்தார்.
நான் ஐஸ் ட்ரக்கில் ஐஸ்கிரீம் விற்பதை தெரிந்த உடன் ஒரு வாரத்திற்குள் எனது கடையை மூடுவதற்கான வேலைகள் நடந்தது அதன் பின்னர் ஒரு மாதம் நான் இந்த ட்ரக்குகளை வெளியே எடுத்துச் செல்ல முடியவில்லை. இந்த சமயத்தில் என்னுடைய அம்மா என்னுடன் இருந்திருந்தால் மிகவும் உறுதுணையாக இருந்திருக்கும்
எனது அம்மாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. ஆம்புலன்ஸில் அவரை ஏற்றி அழைத்துச்சென்றேன். அந்த ஆம்புலன்ஸில் இருந்த ஓட்டுநர் எனது அம்மாவுக்கு எந்த வித முதலுதவி சிகிச்சையும் அளிக்கவில்லை. நான் அவரிடம் ஏதாவது செய் என்று சொன்னேன்.
ஆனால் அவர் அதை கண்டுகொள்ளவில்லை. எனக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க தெரிந்திருந்தால் ஏதாவது செய்து காப்பாற்றி இருக்கலாமோ என்று எனக்குத் தோன்றும். எனக்கு இப்போது அது எப்படி செய்ய வேண்டும் என்பது தெரியும்.
இது மாதிரியான அடிப்படையான விஷயங்களை எல்லோருமே தெரிந்து வைத்திருக்க வேண்டும். காரணம் யாருக்கு எப்போது பிரச்சினை வரும் என்று தெரியாது.இங்கிருந்து பக்கத்து கட்டிடம் தான் அந்த மருத்துவமனை.
ஆனால் அதற்குள் எல்லாமே முடிந்து விட்டது. அவர்கள் எனது அம்மாவை மூன்று நாட்கள் மருத்துவமனையில் வைத்து காசு பிடுங்குவதற்காக ஏதோ செய்தார்கள். அவர் இறந்து போய் விட்டார் என்பது தெரிந்தது. உடனே நான் அம்மாவை கொடுத்து விடுங்கள் என்று சொல்லி விட்டேன். ஆம்புலன்ஸில் ஏறும் போது எனது அம்மா எனக்கு பயமா இருக்குடா என்று சொன்னார் அது எனது மண்டையில் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும்.” என்று பேசினார்
நன்றி கலாட்டா
டாபிக்ஸ்