TAMILAGA VETTRI KAZHAGAM: என்ன விஜய் நீங்களே இப்படி பண்ணலாமா? - அபராதம் கட்டாத காரில் சுற்றி வரும் விஜய்!
TAMILAGA VETTRI KAZHAGAM: தனது கட்சியின் கொடி அறிமுக விழாவிற்கு விஜய் வந்த கார் தொடர்பாக சர்ச்சை ஒன்று எழுந்து உள்ளது.
TAMILAGA VETTRI KAZHAGAM: தன்னுடைய கட்சியான தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை அந்தக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் அறிமுகம் செய்து வைத்தார். சென்னை பனையூரில் இருக்கும் தமிழக வெற்றிக்கழகத்தின் அலுவலகத்தில் வைத்து இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
விஜய்யின் கார் அபராதம்
இந்த நிலையில் தனது கட்சியின் கொடி அறிமுக விழாவிற்கு விஜய் வந்த கார் தொடர்பாக சர்ச்சை ஒன்று எழுந்து உள்ளது. TN 37 DR 1111 என்ற பதிவு எண் கொண்ட டொயோட்டா இனோவா கிரிஸ்டா காரில் நிகழ்ச்சிக்கு வந்தார்.
கார் சென்னையில் இயக்கப்பட்டு வரும் நிலையில், இதன் மீது ஏகப்பட்ட அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் ரூ.4,500 அபராதம் நிலுவையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடைசியாக ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டது.
கோவை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இந்த வாகனம் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதை பார்த்த அனைவரும், ஒரு கட்சி தொடங்கிவிட்டு விஜய் இப்படி அபராதம் செலுத்தாமல் இருக்கும் காரில் பயணம் செய்யலாமா? என கேள்வி கேட்டு வருகிறார்கள்.
படிப்படியாக உயர்ந்த விஜய்
முன்னதாக, 32 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் பயணிக்கும் நடிகர் விஜய் படிப்படியாக உயர்ந்து தனக்கென தனி இடத்தை பிடித்து முத்திரை பதித்தார். இதற்கிடையே தான் அரசியலிலும் களமிறங்க இருக்கிறேன் என்பதை மறைமுகமாக வெளிப்படுத்தி வந்த நடிகர் விஜய், பல்லாண்டுகளாக இயங்கி வந்த தனது ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார்.
அதன் வழியாக பல்வேறு நற்பணிகளை செய்து வந்த அவர், கடந்த 2022-ஆம் ஆண்டும், இந்த ஆண்டும் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புத் தேர்வில் தொகுதி வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களை அங்கீகரிக்கும் விதமாக சான்றிதழும் ஊக்கத் தொகையும் அளித்து உத்வேகப்படுத்தினார்.
அவர் பேசும் போது, இன்றைய நாள் எல்லோருக்கும் மிகவும் சந்தோஷமான நாள். என்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கி, நம்முடைய கட்சியின் பெயரை கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தேன். அன்றிலிருந்தே ஒரு குறிப்பிட்ட நாளுக்காக நீங்கள் காத்திருந்தீர்கள் என்பது எனக்கு நன்றாக தெரிந்தது.
முதல் மாநாடு எப்போது?
ஆம், நம்முடைய முதல் மாநில மாநாட்டிற்கான அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. அது எங்கு எப்போது நடக்கும் உள்ளிட்ட விவரங்களை நான் கூடிய சீக்கிரமே அறிவிக்கிறேன். அதற்கு முன்னதாக நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக நம்முடைய தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை நான் அறிமுகப்படுத்தி இருக்கிறேன்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்