Vijay Devarakonda: ’ரஜினி 6 படம் பிளாப்..’ வாய்யை கொடுத்து மாடிக்கொண்ட விஜய் தேவரகொண்டா
குஷி படத்தின் விளம்பர நிகழ்ச்சியில், விஜய் தேவரகொண்டா ரஜினிகாந்த் தோல்வி படங்கள் பற்றி பேசினார்.
நடிகர் விஜய் தேவரகொண்டா தற்போது குஷி படத்தின் விளம்பரங்களில் பிஸியாக இருக்கிறார். சிவா நிர்வாணா இயக்கும் இப்படத்தில் சமந்தா ரூத் பிரபு கதாநாயகியாக நடித்துள்ளார். இது செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியாகிறது.
நடிகர் விஜய் தேவரகொண்டா சமீபத்தில் சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ரஜினி பற்றி பேசி சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
அவர் கூறுகையில், ”ரஜினிகாந்த் 6 பேக் டு பேக் ஃப்ளாப்ஸ் கொடுத்தார். ஆனால் அவர் ஜெயிலர் போன்ற பிளாக் பஸ்டர் படம் மூலம் மீண்டும் வந்தார். பிறகு நாம் வாயை மூடிக்கொண்டு பார்க்கிறோம்.
சிரஞ்சீவிக்கு 6-7 தோல்விகள் வந்து இருக்கிறது. சரியான இயக்குநரின் எனர்ஜி கிடைத்தால் இந்த சங்கராந்திக்கு செய்தது போல் மீண்டும் ஒரு பரபரப்புடன் வருவார். சிரு தொழில்துறையை மாற்றினார். அவர் வந்ததும் அங்கிருந்த ஆக்ஷன், டான்ஸ், பெர்ஃபார்மன்ஸ் எல்லாம் முற்றிலும் மாறிப்போனது. அவர் பலரை இத்துறையில் நுழைய தூண்டினார்.
நடிகர்களை வெற்றி, தோல்வியை வைத்து மதிப்பிடக் கூடாது. அவர்களின் படங்களை அனைவரும் ரசிக்கும் வகையில் பலரை இத்துறையில் நுழைய தூண்டி இருக்கிறது. மூத்த நடிகர்கள் குறித்து கருத்து தெரிவிப்பதை அவமரியாதையாக கருதுகிறேன்” என்றார்.
விஜய்யின் உதாரணம் ரஜினிகாந்தின் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை, ரசிகர் ஒருவர், “தோல்வி திரைப்படங்கள் இல்லை. தர்பார் மற்றும் அண்ணாத்தே சராசரி படங்கள்.” மற்றொருவர், “இவ்வளவு பேசுவதை நிறுத்துங்கள். எல்லாவற்றிலும் நீங்கள் கருத்து சொல்ல வேண்டியதில்லை” என்றனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்