Vijay Politics: வேகம் எடுக்கும் கோட் ஷூட்டிங்.. மாநாடு நடத்த திட்டம்.. அரசியலில் பக்கா பிளானுடன் இறங்கும் விஜய்-vijay decided to keep conference before entering politics - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vijay Politics: வேகம் எடுக்கும் கோட் ஷூட்டிங்.. மாநாடு நடத்த திட்டம்.. அரசியலில் பக்கா பிளானுடன் இறங்கும் விஜய்

Vijay Politics: வேகம் எடுக்கும் கோட் ஷூட்டிங்.. மாநாடு நடத்த திட்டம்.. அரசியலில் பக்கா பிளானுடன் இறங்கும் விஜய்

Aarthi Balaji HT Tamil
Jan 31, 2024 07:52 AM IST

நடிகர் விஜய் பிரமாண்ட மாநாடு நடத்த திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

விஜய்
விஜய்

நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். முதல் முறையாக இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. கோட் படப்பிடிப்பிற்குப் பிறகு விஜய் அரசியலில் குதிக்கப் போகிறார். முதற்கட்ட பணிகள் அனைத்தும் மும்முரமாக நடந்து வருகிறது. முதற்கட்டமாக, பிப்ரவரியில் தேர்தல் ஆணையத்தில் தனது அரசியல் கட்சியை முறைப்படி பதிவு செய்ய திட்டமிட்டு உள்ளார் .

விஜய் அரசியல் கட்சி

விஜய்யின் அரசியல் கட்சி பிப்ரவரி 4 ஆம் தேதி பதிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. விஜய் தலைமையிலான அரசியல் கட்சிக்கு தமிழக முன்னேற்றக் கழகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . தற்போது முழு நேர அரசியல்வாதியாக மாற முடிவு செய்துள்ள விஜய், தனது கட்சியில் பெண்களுக்கு குறிப்பாக படித்த பெண்களுக்கு அதிக முன்னுரிமை அளித்து வருகிறார். ஊழலுக்குப் பிறகு மற்ற கட்சிகளில் இருந்து வந்தாலும் அவர்களுக்கு தன் கட்சியில் இடமில்லை என்பதில் விஜய் உறுதியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

விஜய் அரசியல்

மேலும் தனது கட்சிப் பதவிகளில் சினிமா சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்றும் விஜய் முடிவு செய்து உள்ளார் . இப்படி பல்வேறு திட்டங்களுடன் அரசியலில் அடியெடுத்து வைக்கும் விஜய் , தனது முதல் நடவடிக்கையாக கோட் படப்பிடிப்பை முடித்துவிட்டு வரும் ஏப்ரல் மாதம் மதுரையில் பிரமாண்ட மாநாட்டை நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

மதுரையில் விஜய் பிளான் மாநாடு

மதுரை மாவட்டம் அரசியல்வாதிகளுக்கு ராசியான இடம் என்பது அனைவரும் அறிந்ததே . கமல் ஹாசனும் மதுரையில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்கினார் . இப்போது விஜய்யும் அதே உணர்வை பின்பற்றப் போவதாகத் தெரிகிறது. இந்த மதுரை மாநாட்டை கமகம பிரியாணி மற்றும் கறி விருந்துடன் நடத்தும் திட்டத்துடன் நடத்த இருப்பதாக சொல்லப்படுகிறது. 

நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ படம் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வெற்றி பெற்றது. ஆனால் அதோடு படத்திற்கு பல விமர்சனங்களும் வந்தன. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம், அதன் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் மற்றும் அதன் பின் கதையில் நம்பிக்கை இல்லாததால் பெரும் விமர்சனத்தைப் பெற்றது. ஆனால், லியோ படம் வசூலை வாரிக்குவித்ததால் இது ஸ்பெஷல் டிஸ்கஷனாக இல்லாவிட்டாலும் விஜய் ரசிகர்களுக்கு பெரிய திருப்தியை கொடுக்கவில்லை என்பதே உண்மை.

தளபதி விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் லியோ படத்தின் இயக்குநர் லோகேஷை விமர்சித்துள்ளது தற்போது ஹாட் டாபிக்காக மாறி உள்ளது. எஸ்.ஏ.சந்திரசேகர் அந்த இயக்குநர் யார் என்ற பெயரை குறிப்பிடப்படவில்லை என்றும், அந்த மூத்த இயக்குநர் லோகேஷ் தான் என வெட்ட வெளிச்சமாக தெரியவந்தது. விஜய் மீது இருக்கும் கோபம் காரணமாக லோகேஷை பழி வாங்கினார் என ஒரு சார்பினர் கூறுகின்றனர். 

மறுபக்கம், விஜய் கட்சி தொடங்குவது எஸ்.ஏ.சந்திரசேகருக்கு பிடிக்கவில்லை அதனால் இப்படி செய்தார் என பேசப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.