Vijay Antony: அத்துமீறிய ஊடகங்கள்.. கடுப்பான பிரபலங்கள்..கல்லறை தோட்ட வாசலை சாத்திய விஜய் ஆண்டனி!
விஜய் ஆண்டனியின் மகள் இறந்த செய்தி கேட்டு மீடியாக்கள் பல நேற்று முதலே அந்த நிகழ்வுகளையும், அதற்கு வரும் பிரபலங்களையும் கவர் செய்வதற்காக குவிந்து இருந்தனர். சில ஊடகங்கள் அத்துமீறி செயல்பட்டன. இதில் அங்கிருந்தவர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தகவல் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியது. விஜய் ஆண்டனி மகள் தற்கொலை தொடர்பாக சென்னை தேனாம்பேட்டை போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
முதல் கட்ட விசாரணையில், கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்த மீரா, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்றும் இந்த சூழ்நிலையில் மனஅழுத்தம் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.
நேற்று திரை பிரபலங்கள் பலர் மீராவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து இன்று காலை அவருக்கான இறுதி சடங்கள் நடத்தப்பட்டு கீழ்பாக்கத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
விஜய் ஆண்டனியின் மகள் இறந்த செய்தி கேட்டு மீடியாக்கள் பல நேற்று முதலே அந்த நிகழ்வுகளையும், அதற்கு வரும் பிரபலங்களையும் கவர் செய்வதற்காக குவிந்து இருந்தனர். சில ஊடகங்கள் அத்துமீறி செயல்பட்டன. இதில் அங்கிருந்தவர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
சோசியல் மீடியாவிலும் கண்டனங்கள் ஒலித்தன. இதனையடுத்து விஜய் ஆண்டனி, கல்லறை தோட்டத்தின் வாசலிலேயே அனைத்து மீடியாக்களையும் நிறுத்தி விட்டார். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தற்கொலை தீர்வல்ல:
வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.
மாநில உதவி மையம் :104
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
டாபிக்ஸ்