Vijay Antony: மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் கவுதம் மேனன்.. புதிய பரிமாணத்தில் விஜய் ஆண்டனி!
Hitler Official Teaser: இந்த படத்தில் ரியா சுமன் ஹீரோயினாக நடிக்கிறார். சரண்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குநர் தமிழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
நடிகர் விஜய் ஆண்டனியின் ஹிட்லர் படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தனா எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
முன்னதாக, ஹிட்லரின் தயாரிப்பாளர்கள் ஒரு செய்திக்குறிப்பில், இந்த படம் "ஒரு சாதாரண மனிதனின் கிளர்ச்சி மற்றும் சர்வாதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் போராட்டம்" என்று தெரிவித்தனர். சிறப்பான வகையில் எடிட் செய்யப்பட்டுள்ள இந்த டீசரில், அரசியல் தந்திரங்களால் சாமானியர்களுக்கு இழைக்கப்படும் அநீதியைக் காட்டுகிறது. விஜய் ஆண்டனி நீதியை தன் கையில் எடுக்கும் காவலராக இருக்கலாம் என தெரிகிறது. மறுபக்கம், இயக்குநரும் நடிகருமான கௌதம் மேனன் என்ற காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் வருகிறார்.
இந்த படத்தில் ரியா சுமன் ஹீரோயினாக நடிக்கிறார். சரண்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குநர் தமிழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இசை விவேக்-மெர்வின், ஒளிப்பதிவாளர் நவீன் குமார், படத்தொகுப்பாளர் சங்கத்தமிழ் ஈ. ஹிட்லரின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
2023ஆம் ஆண்டி பிச்சைக்காரன் 2, கொலை, ரத்தம் ஆகிய படங்கள் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியானது. இதில் பிச்சைக்காரன் 2 படத்தை அவரே இயக்கியிருந்தார். பிச்சைக்காரன் அளவுக்கு அதன் 2ம் பாகம் பெரிய அளவில் பேசப்படவில்லை.
பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான கொலை படமும் ரசிகர்களை கவர தவறியது. ரத்தம் படத்தில் செய்தியாளர் வேடத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் விஜய் ஆண்டனி. தமிழ்ப் படம் எடுத்த சி.எஸ்.அமுதன் இயக்கியிருந்த ரத்தம் படம் விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
படைவீரன், வானம் கொட்டட்டும் ஆகிய படங்களை தொடர்ந்து ஹிட்லர் படத்தை இயக்கியுள்ளார் தனா. முந்தைய இரண்டு படங்களுமே விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்ற படங்கள் ஆகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்