Vijay Antony: 'ஐ மிஸ் யூ'! இறப்பதற்கு முன்பு பத்து வரிகளில் விஜய் ஆண்டனி மகள் எழுதிய உருக்கமான கடிதம் - போலீஸ் விசாரணை
விஜய் ஆண்டனி மகள் இறப்பதற்கு முன் எழுதி கடிதம் ஒன்று கிடைத்துள்ளதாக கூறப்பாடும் நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தகவல் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து சினிமா பிரபலங்கள் பலரும் விஜய் ஆண்டனி மகளுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
விஜய் ஆண்டனி மகள் தற்கொலை தொடர்பாக சென்னை தேனாம்பேட்டை போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில், கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்த மீரா, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் மனஅழுத்தம் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.
இதைத்தெடார்ந்து விஜய் ஆண்டனி மகள் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று போலீசாருக்கு கிடைத்துள்ளது தகவல் வெளியாகியுள்ளது.
அந்த கடிதத்தில், 'ஐ லவ்யூ ஆல். மிஸ் யூ ஆல்' என்று எழுதப்பட்டுள்ளது. மேலும், பத்து வரிகள் கொண்ட அந்த கடிதம் முழுவதும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.
இந்த கடிதம் விஜய் ஆண்டனி மகள் மீரா, மனஅழுத்தத்தில் இருந்தபோது எழுதியதா? அல்லது தற்கொலை செய்யும் முன்னர் எழுதியதா? என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை தீர்வல்ல:
வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.
மாநில உதவி மையம் :104
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்