விஜய் அட்லீ வெற்றிக் கூட்டணி! 200 கோடி வசூல் சாதனை! இதே நாளில் வெளியான மெர்சல்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  விஜய் அட்லீ வெற்றிக் கூட்டணி! 200 கோடி வசூல் சாதனை! இதே நாளில் வெளியான மெர்சல்!

விஜய் அட்லீ வெற்றிக் கூட்டணி! 200 கோடி வசூல் சாதனை! இதே நாளில் வெளியான மெர்சல்!

Suguna Devi P HT Tamil
Published Oct 18, 2024 04:33 PM IST

நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் அட்லீயின் வெற்றிக் கூட்டணியின் முக்கிய படைப்பில் ஏழு வருடங்களுக்கு முன் இதே நாளில் மெர்சல் படம் வெளியானது.

விஜய் அட்லீ வெற்றிக் கூட்டணி! 200 கோடி வசூல் சாதனை! இதே நாளில் வெளியான மெர்சல்!
விஜய் அட்லீ வெற்றிக் கூட்டணி! 200 கோடி வசூல் சாதனை! இதே நாளில் வெளியான மெர்சல்!

நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் அட்லீயின் வெற்றிக் கூட்டணியின் முக்கிய படைப்பில் ஏழு வருடங்களுக்கு முன் இதே நாளில் மெர்சல் படம் வெளியானது. அப்பா மற்றும் இரு மகன்கள் என மூன்று கதாபாத்திரத்தில் நடித்து நடிகர் விஜய் காலக்கியிருப்பார். இந்த படம் கடந்த 2017 ஆம் ஆண்டின் தீபாவளி அன்று அக்டோபர் 18 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குனராக அட்லீ தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தளபதி விஜய்யுடன் தெறி படத்தில் இணைந்தார். இப்படம் நல்ல வெற்றி பெற்றதும், மீண்டும்  மெர்சல் படத்தில் இருவரும் இணைந்தனர். 

விஜய் அட்லீ வெற்றிக் கூட்டணி

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய்  தெறி,மெர்சல் மற்றும் பிகில் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த மூன்று படங்களும் வசூல் ரீதியாக வெற்றியடைந்த படங்களாகும். முதலில் இணைந்த தெறி படம் மொத்தமாக ரூ.150 கோடி வசூல் பெற்றது. ஆனால் இப்படத்தின் பட்ஜெட் ரூ. 75 கோடி  தான். அதனைத் தொடர்ந்து வந்த மெர்சல் 120 கோடி பட்ஜெட்டில் இயற்றப்பட்டது. இப்படம் தோராயமாக ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்பட்டது. 

இந்த வெற்றிக் கூட்டணி ஹாட்ரிக் அடித்த படம் தான் பிகில். இப்படமானது ரூ.180 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரூ300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.  

மூன்று வேடங்களில் மெர்சல் செய்த தளபதி 

மெர்சல் படத்தில் தளபதி மூன்று வேடங்களில் நடித்து இருப்பார். நித்யா மேனன் ஜோடியாக தளபதி என்ற கதாபாத்திரத்தில் அன்பு நிறைந்த கிராமத்து ஆளாக இருப்பார். கிராம மக்களுக்கு மருத்துவமனை கட்டித் தருவது, அனைவருக்கும் உதவுவது என அசத்தியிருப்பார். இப்படத்தில் நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் என மொத்தம் மூன்று கதாநாயகிகள். இவர்கள் மூன்று பேரிடமும் காதல், நடனம் என வெவ்வேறு பரிமாணங்கள் காட்டி அசத்தி இருப்பார். மேலும் இப்படத்தின் ஆக்சன் காட்சிகளும் பெரும் அளவில் பேசப்பட்டன. 

இப்படத்தில் நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா ரூத் பிரபு, எஸ்.ஜே. சூர்யா, வடிவேலு, சத்யராஜ், ஹரீஷ் பெராடி மற்றும் பலர் நடித்துள்ளனர். தேனாண்டாள் ஸ்டுடியோ தயாரித்த இந்த திரைப்படம் கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் 18 அன்று இதே நாளில் வெளியாகி இன்றுடன் 7 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 

 

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.