Love Insurance Kompany: லைட்டா பட்டி டிங்கரிங் பார்த்த விக்னேஷ் சிவன்.. லவ் இன்சூரன்ஸ் கம்பெனி ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்
Love Insurance Kompany: இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் LIK படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

இயக்குநர் விக்னேஷ் சிவன் அண்மையில் பிரதீப் ரங்கநாதனை கதாநாயகனாக வைத்து லவ் இஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். தவிர, எஸ். ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்திற்கான இசையினை அனிருத் செய்ய, படத்தயாரிப்புப் பொறுப்பினை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ ஏற்றுள்ளது.
லவ் இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷன்
எல்.ஐ.சி.' ( லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ) என பெயர் வைக்கப்பட்டு இருந்த நிலையில் எல். ஐ. சி நிறுவனம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அந்த நோட்டீஸில், லவ் இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் என்ற தலைப்பினை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என சொல்லப்பட்டது.
இதனால் டைட்டிலை மாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதே டைட்டிலை வைத்துவிட்டு லேசாக LICக்கு பதிலாக LIK என மாற்றி இருக்கிறார்.
