தொடங்கியது விடுதலை 2 டப்பிங்! ரிலீஸ் எப்போது? படக்குழு அறிவிப்பு!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  தொடங்கியது விடுதலை 2 டப்பிங்! ரிலீஸ் எப்போது? படக்குழு அறிவிப்பு!

தொடங்கியது விடுதலை 2 டப்பிங்! ரிலீஸ் எப்போது? படக்குழு அறிவிப்பு!

Suguna Devi P HT Tamil
Oct 11, 2024 06:28 PM IST

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கி வரும் ‘விடுதலை பாகம் 2’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் டிசம்பர் மாதம் திரைக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடங்கியது விடுதலை 2 டப்பிங்! ரிலீஸ் எப்போது? படக்குழு அறிவிப்பு!
தொடங்கியது விடுதலை 2 டப்பிங்! ரிலீஸ் எப்போது? படக்குழு அறிவிப்பு!

மேலும் இப்படத்தில் பிரகாஷ்ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன், பவானி ஸ்ரீ, உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்த இந்தப் படம் ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றது. மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்தும் அப்படத்தின் இறுதியில் அறிவிக்கப்பட்டது.  

விஜய் சேதுபதி கதாபாத்திரம் 

இந்தப் படத்தின் அடுத்த பாகத்தின் படப்பிடிப்பு  தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிப்பதாக ஒரு அறிவிப்பு வெளியாகி இருந்தது. மேலும் விடுதலை முதல் பாகத்தில் குறைந்த அளவே காண்பிக்கப்பட்ட விஜய் சேதுபதி கதாபாத்திரம் இந்த 2-ம் பாகத்தில் மிகவும் தெளிவாக காட்டப்படும் எனத் தகவல் வெளியானது. விஜய் சேதுபதி கதாபாத்திரத்துக்கான பின்புலத்தை முழுமையாக காட்சிப்படுத்தி இருக்கிறார் வெற்றிமாறன். இந்த ஆண்டு வரும் டிசம்பர் 20-ம் தேதி வெளியாக இருப்பதால், அதற்குள் அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும் என்பதற்காக பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. அதன்படி படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

நீளமான படம் 

முன்னதாக விடுதலை படத்தின் காட்சிகள் அதிகமாக இருந்த காரணத்தாலேயே இப்படம் இரண்டு பாகங்களாக வெளியிடப்பட்டது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் சுமார் மூன்றரை மணி நேரத்திற்கும் அதிகமாக எடுத்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முழு படத்தை ஓடிடி யில் வெளியிடலாம் எனவும். இதனை 3 மணி நேரத்திற்கு குறைத்து அதனை மட்டும் திரையரங்குகளில் வெளியிடலாம் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தை குறைக்கும் எடிட்டிங் குழுவிற்கு இது பெரிய சிக்கலாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. 

மேலும் இப்படத்தின் பட்ஜெட் தொகையும் சற்று அதிகரித்துள்ளது. படம் வெளியாகி வெற்றி பெற்றால் மட்டுமே இதில் போட்ட பணத்தை திருப்பி எடுக்க முடியும் என தயாரிப்பு குழுவும் எதிர்பார்த்துள்ளது. விடுதலை பாகம் 1 வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.ஆனால் வசூல் ரீதியாக இப்படியா வெற்றி அடைந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் படத்தின் முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்று இருந்த நிலையில் இரண்டாம் பாகம் நிச்சயம் வெற்றி பெரும் என கோலிவுட் வட்டரங்கள்  பேசி வருகின்றன. 

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.