Aparna Das Wedding: ‘கொண்டு வாங்கடா சந்தனத்த..’ பீஸ்ட் நடிகைக்கு டும் டும் டும்! - குஷியில் குடும்பம்! - வீடியோ!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Aparna Das Wedding: ‘கொண்டு வாங்கடா சந்தனத்த..’ பீஸ்ட் நடிகைக்கு டும் டும் டும்! - குஷியில் குடும்பம்! - வீடியோ!

Aparna Das Wedding: ‘கொண்டு வாங்கடா சந்தனத்த..’ பீஸ்ட் நடிகைக்கு டும் டும் டும்! - குஷியில் குடும்பம்! - வீடியோ!

Kalyani Pandiyan S HT Tamil
Apr 23, 2024 05:19 PM IST

இவர்களது திருமணம் கேரள மாநிலம் வடக்கன் சேரியில் வைத்து நாளை நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு, இன்று அவர்கள் ஹல்தி நிகழ்வை அரங்கேற்றி இருக்கின்றனர்.

அபர்ணா தாஸ் கல்யாணம்!
அபர்ணா தாஸ் கல்யாணம்!

அதனை தொடர்ந்து தமிழில், பீஸ்ட் திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து நடித்திருந்தார். அந்தப்படத்தின் மூலம் தமிழிலும் பிரபலமான இவர், தொடர்ந்து கவின் நடித்த ‘டாடா’ படத்தில் நடித்தார். இந்தப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதில் அபர்ணா வெளிப்படுத்திய நடிப்பும்m ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டது.

மலையாள நடிகருமான தீபக் பரம்போல் உடன் திருமணம்!

இவரும் மலையாள நடிகருமான தீபக் பரம்போலும் காதலித்து வந்ததாகச் சொல்லப்பட்டது. முன்னதாக, இவர்கள் ‘மனோகரம்’ திரைப்படத்தில் ஒன்றாக இணைந்து நடித்திருந்தனர்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னதாக இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், அது தொடர்பான அழைப்பிதழ் அட்டையும் சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆனது. அதனைதொடர்ந்து அவர்கள் திருமணம் செய்து கொள்ள இருப்பது உறுதியானது.

வடக்கன் சேரியில் வைத்து நாளை நடைபெற இருக்கிறது.

இவர்களது திருமணம் கேரள மாநிலம் வடக்கன் சேரியில் வைத்து நாளை நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு, இன்று அவர்கள் ஹல்தி நிகழ்வை அரங்கேற்றி இருக்கின்றனர்.

இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அபர்ணா தாஸ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இதனைப்பார்த்த பலரும், அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மாப்பிள்ளை யார்?

மலையாளத்தில் வினித் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் வெளியான  ‘மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்’ திரைப்படத்தில் அறிமுகம் ஆன தீபக், தொடர்ந்து  ‘தட்டத்தின் மறைட்டு’,  ‘டி கம்பெனி’,  ‘தி கிரேட் ஃபாதர்’,  ‘இன்டர் நேஷனல் லோக்கல் ஸ்டோரி’  உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

 

முன்னதாக, இவர் நடித்த டாடா படத்தில் சிறப்பான நடிப்பை கொடுத்து கவனம் பெற்றவர் நடிகர் கவின்.

சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகம் ஆகி நண்பர்களின் குறும்படங்களில் நடிக்கத்தொடங்கியவர்தான் நடிகர் கவின். தொடர்ந்து, விஜய் டிவியின் ‘கனா காணும் காலங்கள்’ தொடரில் வாய்ப்பு கிடைத்த நிலையில், அதில் நடிகராக அறிமுகம் ஆனார். அதனைதொடர்ந்து சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

வெள்ளித்திரையில் நடிகராக வேண்டும் என்று முயன்று கொண்டிருந்தவருக்கு, சத்ரியன் படத்தில் துணை கதாபாத்திரம் கிடைத்தது. அதனைதொடர்ந்து ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். ஆனால் அந்தப்படம் எதிர்பார்த்த வெற்றியைக்கொடுக்க வில்லை.

இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் நண்பனுக்காக நின்றது, லாஸ்லியாவுடனான காதல் சர்ச்சை உள்ளிட்டவை அவரை இன்னும் பிரபலம் ஆக்கியது.

அதன் பின்னர் வினித் இயக்கத்தில் உருவான லிஃப்ட் படத்தில் கதாநாயகனாக நடித்தார். இந்தப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்த நிலையில், அதன் பின்னர் இவர் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது இவர் ஸ்டார் மற்றும் ரொமன்ஸ் படங்களில் நடித்து வருகிறார்.

அண்மையில் தயாரிப்பாளர் ஒருவர் கவின் படப்பிடிப்பிற்கு சரியான நேரத்திற்கு வருவதில்லை. தாமதமாகி வந்தாலும், நீண்ட நேரம் கேரவனிலேயே உட்கார்ந்து இருக்கிறார் என்று புகார் கூறியிருந்தார். இதற்கு கவின் மறைமுகமாக பதிலடி கொடுத்தார்.

தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் இது குறித்து கவின் பேசும் போது, “ ஏதாவது லேட் ஆகி விட்டதா? நான் எத்தனை மணிக்கு வருவேன் என்று சொல்லி இருந்தார்களா? கேட்க, கூட்டத்தில் இருந்து ஏழு மணி என்று பதில் வந்தது.

அதனை தொடர்ந்து பேசிய கவின், என்னிடமும் ஏழு மணிக்கு என்று சொல்லி இருந்தார்கள். ஆறு மணியில் இருந்து நானும் ரெடியாகதான் இருந்தேன். ஆனால், என்னைக்கூப்பிட வந்தவர்கள் 6.45க்குதான் வந்தார்கள். அவர்களுக்கும் சேர்த்து நான் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.