பார்த்து படம் ரிலீஸ் ஆகிற போது.. வீட்டிற்கு முடங்கி கிடக்கும் விடாமுயற்சி.. அப்டேட் கொடுத்து எழுப்பிய இயக்குநர்
அஜித் நடிப்பில், இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் அப்டேட் வெளியாகி இருக்கிறது.
விடாமுயற்சி படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி இருப்பதாக அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா அறிவித்து இருக்கிறார். இது தொடர்பான படங்களையும் அவர் அதில் இணைத்து இருக்கிறார்.
நடிகர் அஜித்குமாரின் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘துணிவு’. இந்தத்திரைப்படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கினார். பொங்கல் பரிசாக வெளியான இந்தத்திரைப்படம் வெற்றி பெற்றது. இந்தப்படத்திற்கு அடுத்தபடியாக நடிகர் அஜித் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தயாரிப்பு நிறுவனத்திற்கும், விக்னேஷ் சிவனிற்கும் இடையே நடந்த படைப்பு தொடர்பான முரண்பாடுகள், விக்னேஷ் சிவனை அந்தப்படத்தில் இருந்து புறந்தள்ளியது.
உள்ளே வந்த மகிழ்திருமேனி
இந்த நிலையில்தான் இயக்குநர் மகிழ் திருமேனி அஜித்தின் 62 -ல் கமிட் செய்யப்பட்டார். அதன் பின்னர் அந்தப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனாலும், அதற்கடுத்ததாக, அந்தப்படம் குறித்த எந்தத்தகவலும் வெளியாக வில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் தொடர்ந்து அந்தப்படத்தின் அப்டேட் குறித்து கேட்டுக்கொண்டே இருந்தார்கள். ஆனால் படக்குழு அதனை கண்டுகொள்ளவே இல்லை. இந்த நிலையில், விடாமுயற்சி கைவிடப்படுகிறதா என்ற கேள்வி எழுந்தது. இதனையடுத்து விடாமுயற்சி படப்பிடிப்பில் நடந்த விபத்து தொடர்பான வீடியோவை வெளியிட்ட அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, படத்தை இவ்வளவு கஷ்டப்பட்டு எடுக்கும் போது, படம் குறித்தான தவறான தகவல்கள் படக்குழுவை வருத்தமடைய செய்வதாக குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கிடையே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் கமிட் ஆனார் அஜித். இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் கூட, விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி உள்ளிட்ட எந்த ஒரு அப்டேட்டும் வெளியாக வில்லை. இதனையடுத்து விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது தொடர்பான அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் தற்போது டப்பிங் குறித்தான அப்டேட் வெளியாகி இருக்கிறது. குட் பேட் அக்லி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், விடாமுயற்சி திரைப்படம் அதற்கு அடுத்தபடியாகவே வெளியாகும் என்று திரைவட்டாரத்தில் பேசப்படுகிறது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்