Viduthalai Part 2 Review: ‘வாத்தியார் பாடம் எடுத்தாரா? பாடம் கற்றாரா?’ விடுதலை 2 முதல் விமர்சனம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Viduthalai Part 2 Review: ‘வாத்தியார் பாடம் எடுத்தாரா? பாடம் கற்றாரா?’ விடுதலை 2 முதல் விமர்சனம்!

Viduthalai Part 2 Review: ‘வாத்தியார் பாடம் எடுத்தாரா? பாடம் கற்றாரா?’ விடுதலை 2 முதல் விமர்சனம்!

Kalyani Pandiyan S HT Tamil
Dec 20, 2024 02:56 PM IST

Viduthalai Part 2 Review: படத்தில் இடம் பெற்ற எல்லா கதாபாத்திரங்களும் கொடுத்த கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்து இருக்கின்றனர். சேத்தன் கதாபாத்திரம் காமெடிக்கு கேரண்டி. இரண்டாம் பாகத்தில் சூரி பெரிதாக தெரியவில்லை. மஞ்சு வாரியருக்கும், விஜய் சேதுபதிக்கான காதல் ரசிக்க வைக்கிறது.

Viduthalai Part 2 Review: ‘வாத்தியார் பாடம் எடுத்தாரா? பாடம் கற்றாரா?’ விடுதலை 2 முதல் விமர்சனம்!
Viduthalai Part 2 Review: ‘வாத்தியார் பாடம் எடுத்தாரா? பாடம் கற்றாரா?’ விடுதலை 2 முதல் விமர்சனம்!

கதையின் கரு என்ன?

முதல் பாகத்தில் போலீசுக்கும், மக்கள் படைக்கும் இடையே நடந்த மோதல், வாத்தியாரின் கைது, அதிகாரிகளின் அதிகார வர்க்கம் மக்களுக்கு எதிராக நடத்திய வெறியாட்டம் உள்ளிட்டவற்றை திரைக்கதையாக கொடுத்த வெற்றிமாறன், இந்த பாகத்தில் மக்கள் படை உருவான கதை, வாத்தியார் கம்யூனிசம் பாதையை தேர்ந்தெடுத்தற்கான காரணம், போலீசுக்கும், மக்கள் படைக்கும் இடையேயான போரில் ஜெயித்தது யார்? குமரேசனின் குற்ற உணர்வு அவனை என்ன செய்தது உள்ளிட்டவற்றை திரைக்கதையாக கொடுத்திருக்கிறார்.

கடந்த பாகம் முழுக்க முழுக்க குமரேசன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த சூரியை சுற்றி இருந்த நிலையில், இந்த பாகம் முழுக்க, முழுக்க வாத்தியார் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த விஜய் சேதுபதியை சுற்றி அமைந்திருக்கிறது.

படம் முழுக்க வாத்தியாராக விரவி கிடக்கிறார் விஜய் சேதுபதி. வெற்றிமாறன் வழியே வாத்தியாராக அவர் பேசும் ஒவ்வொரு வசனமும் சமுதாயத்திற்கான பாடம். வாத்தியாரின் வாழ்கையில், வெவ்வேறு பருவங்களில் அவர் எதிர்கொள்ளும் சூழ்நிலைகளை புரிந்து கொண்டு நடித்திருப்பது சிறப்பு.

குறிப்பாக வயதான தோற்றத்தில் அவர் வெளிப்படுத்தும் மேனரிசங்கள் அல்டிமேட்.

அவரது மனைவியாக மஞ்சு வாரியர். தைரியமும், தெளிவும் நிறைந்த பெண்ணாக சிறப்பாக நடித்திருக்கிறார். மஞ்சு வாரியருக்கும், விஜய் சேதுபதிக்கான காதல் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. டி கம்பெனியின் ஓசியாக வரும் சேத்தன் காமெடி, வில்லனிசம் என இரண்டிலும் பட்டையை கிளப்பி இருக்கிறார். ராஜீவ் மேனன் நடிப்பு புருவம் விரியவைக்கிறது. வாத்தியாரின், வாத்தியாராக வரும் கிஷோரின் நிதானம் கம்யூனிசம் கொள்கைகளை சரியாக உணரவைக்கிறது.சூரி பெரிதாக தெரியவில்லை. கென் கருணாஸின் ஆக்‌ஷன் அதகளம்.

வெற்றிமாறனின் அரசியல் 

வாத்தியார் கதாபாத்திரத்தை உருவாக்கிய வெற்றிமாறன் வாத்தியார் தேர்ந்தெடுத்த கம்யூனிச பாதையில், பண்ணையார்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்திய வன்முறை, அவர்களுக்கு எதிராக மக்கள் வன்முறையை கையில் எடுத்ததால் நடந்த விபரீதங்கள், உயர் சாதி பெண்களை தாழ்த்தப்பட்ட ஆண்கள் காதலிப்பதற்கு எதிராக வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதில், கணவன், மனைவி எப்படி இருக்க வேண்டும்? அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் அலட்சியமாக நடத்தும் கொலைகள் சரியானதா? அதிகார வர்க்கத்துக்கு ஜாதிய ஏற்றத்தாழ்வு எவ்வளவு உறுதுணையாக இருக்கிறது? ஒற்றுமையின் பலம் என்ன?உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களை திரைக்கதையாக வடித்து கொடுத்து இருக்கிறார்.

காட்சிகள் சுவாரசியமாக, விறுவிறுப்பாக சென்றாலும், கம்யூனிசம் பாதையில் இடம்பெற்ற அதிகபட்ச வசனங்கள் கொட்டாவியை வரவழைக்கின்றன. இளையராஜா இன்னும் தரமான பின்னணி இசையை கொடுத்திருக்க வேண்டும். வழக்கம் போல வெற்றி மாறன் படத்தில் இடம்பெறும் டப்பிங் பிரச்சினை இந்த படத்திலும் இருக்கிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.