Vetrimaaran: ‘பனிச்சிறுத்தையை போட்டோ எடுக்க போய்.. கடந்த 10 வருஷமா..’ - வெற்றிமாறன் கண்ணீர்!
எனக்கும் அவருக்கும் பொதுவான விருப்பங்கள் நிறைய இருந்தன. அந்த விஷயங்கள் குறித்துஆர்வமாக தெரிந்து வைத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல், அது குறித்தான தேடல் என்பது அவருக்கு எப்போதுமே இருக்கும்.
பிரபல அரசியல்வாதியான சைதை துரைசாமியின் மகனும், திரைப்பட இயக்குநருமான வெற்றி துரைசாமி இமாச்சல பிரதேசத்திற்கு காரில் சென்ற போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் உயிரிழந்த அவரது உடலானது 8 நாட்களுக்கு பிறகு சட்லஜ் நதியில் இருந்து மீட்கப்பட்டது.
இதனையடுத்து அவரது நினைவேந்தல் கூட்டம் அண்மையில் நடந்தது. அதில் வெற்றிமாறன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
அதில் பேசிய வெற்றிமாறன், “அவர் எங்கு சென்றாலும் என்னுடைய மாணவர் என்று தான் அறிமுகப்படுத்திக் கொள்வார். எனக்கு அவர் நிறைய விஷயங்களை சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
எனக்கும் அவருக்கும் பொதுவான விருப்பங்கள் நிறைய இருந்தன. அந்த விஷயங்கள் குறித்துஆர்வமாக தெரிந்து வைத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல், அது குறித்தான தேடல் என்பது அவருக்கு எப்போதுமே இருக்கும்.
அவர் ஒரு சிறந்த புகைப்பட கலைஞர். நேஷனல் ஜியோகிராபி சேனலில் பெஸ்ட் போட்டோகிராஃபர் விருதெல்லாம் அவர் வாங்கி இருக்கிறார். கடந்த வருடம் ஆப்பிரிக்கா சென்றவர் ஒரு கொரில்லா குடும்பத்தை போட்டோ எடுத்திருக்கிறார். அதனுடைய தொடர்ச்சி தான் இந்த பயணமும். அவர் அங்கு பனிச்சிறுத்தையை புகைப்படம் எடுப்பதற்காக சென்று இருக்கிறார்.
கடந்த பத்து வருடங்களாக நான் என்ன செய்தாலும் அவருடைய பங்களிப்பு அதில் ஏதோ ஒரு விதத்தில் கண்டிப்பாக இருக்கும்.
ஐஐஎஃப்சி என்ற பெயரில் கல்லூரி தொடங்கி அதில் மாணவர்களுக்கு திரைப்பட அறிவை கொடுக்க வேண்டும் என்று நான் சொன்ன போது அவர் இங்கிருந்த இடத்தை கொடுத்தார். அது மட்டும் இல்லாமல் அந்த இடம் எப்படி இருக்க வேண்டும் உள்ளிட்டவற்றையும் அவரே வடிவமைத்தார்.அந்த மனது எல்லோருக்கும் அவ்வளவு எளிதாக வராது.
எப்போதுமே சிரித்துக் கொண்டே இருப்பார் மனிதர்கள் மட்டுமல்லாது விலங்குகளிடமும் அதே அன்பை காட்டுவார். அவருடைய இழப்பு என்பது மிகவும் ஒரு அதிர்ச்சிகரமானதாக தான் இருக்கிறது அதனை மனம் ஏற்க மறுக்கிறது.இது போன்ற சமயங்களில் நாம் துணிச்சலாக எடுத்து வைக்கும் முன் நகர்வுதான் நாம் யார் என்று புரிய வைக்கும்.
நாம் நம்முடைய வாழ்க்கையில் நிறைய பேரை இழக்கிறோம். ஆனால் ஒரு சில பேருடைய இழப்புதான் நம்முடையது இருந்து சிலவற்றை எடுத்துச் சென்றிருக்கிறது” என்று பேசினார்.
டாபிக்ஸ்