Urvashi: மலையாள சினிமா மோசமா? என்னையும் பாலியல் ரீதியாக சீண்டி.. இரவுல கதவை தட்டுவாங்க..’ - ஓப்பனாக பேசிய ஊர்வசி!
Urvashi: “படப்பிடிப்பில் போதுமான பாதுகாப்பு இல்லை, இரவில் கதவைத் தட்டி பாலியல் துன்புறுத்தல்கள் நடக்கின்றன உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அவர்கள் முன் வைத்திருக்கிறார்கள். என்னுடைய கருத்து இதில் என்னவென்றால்” - ஊர்வசி!

மலையாள சினிமாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நடப்பது உண்மைதான் என்று ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானது. இந்த அறிக்கை மலையாளத்தில் பூகம்பத்தை கிளப்ப, நடிகை ஸ்ரீலேகா மித்திரா, சினிமா அகாடமி தலைவர் ரஞ்சித் மீது பாலியல் புகாரை முன்வைத்தார். இதனையடுத்து அவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
இதனையடுத்து மலையாள நடிகை ஒருவர் ( ரேவதி சம்பத் என்று சொல்லப்படுகிறது) கேரள நடிகர் சங்கமான மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (AMMA) பொதுச் செயலாளர் நடிகர் சித்திக் மீது பாலியல் புகாரை முன்வைத்தார். இதனையடுத்து அவர் தன்னுடைய பதவியை ராஜினாமா பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து சங்க தலைவர் மோகன்லாலும் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இந்த விவகாரம் குறித்து நடிகை ஊர்வசி சன் நியூஸ் யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார்.
எனக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்திருக்கிறது
இது குறித்து அவர் பேசும் போது, “கேரளாவில் நடக்கக்கூடிய பாலியல் சார்ந்த குற்றச்சாட்டுகள் என்பது வட இந்தியாவை ஒப்பிடும் பொழுது மிகவும் குறைவு தான். இது மலையாள சினிமா மட்டும் அல்ல. ஆணோ, பெண்ணோ சேர்ந்து இருக்கக்கூடிய எல்லா இடங்களிலும் இது நடக்கிறது. நாம் செல்லக்கூடிய பேருந்திலோ அல்லது ட்ரெயினிலோ இது போன்ற விஷயங்கள் நடக்கவில்லையா.. என்ன? கோலிவுட்டில் இது போன்ற விஷயங்களை யாரும் முன்வந்து சொல்லவில்லை.