Actress Nalini: ‘அப்பளமும் ஊறுகாயும் இருக்கணும்.. ஸ்டெராய்ட்ஸ் போட்டுதான் இப்படி குண்டாயிட்டேன்’ -நளினி ஷாக் பேட்டி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actress Nalini: ‘அப்பளமும் ஊறுகாயும் இருக்கணும்.. ஸ்டெராய்ட்ஸ் போட்டுதான் இப்படி குண்டாயிட்டேன்’ -நளினி ஷாக் பேட்டி!

Actress Nalini: ‘அப்பளமும் ஊறுகாயும் இருக்கணும்.. ஸ்டெராய்ட்ஸ் போட்டுதான் இப்படி குண்டாயிட்டேன்’ -நளினி ஷாக் பேட்டி!

Kalyani Pandiyan S HT Tamil
Jul 11, 2023 05:35 PM IST

நடிகை நளினி தன்னுடைய உடல் எடை பற்றி பல்வேறு விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்

நளினி பேட்டி
நளினி பேட்டி

நான் நன்றாக சாப்பிடுவதற்காகவே கல்யாணம் செய்தேன். இப்போதுதான் நடிகைகள் தங்களது உடலை மிகவும் நன்றாக பேணி பாதுகாக்க வேண்டும் என்ற நிலைமை உண்டாகி இருக்கிறது. ஆனால் அந்த சமயத்திலெல்லாம் அப்படி கிடையாது. 

குண்டாக இருப்பது மிகவும் பிடிக்கும்

நாங்கள் பியூட்டி பார்லரே பெரிதாக சென்றிருக்க மாட்டோம். நன்றாக நடனமாடுவோம். எனக்கு குண்டாக இருப்பது மிகவும் பிடிக்கும். அதற்காக நான் ஸ்டெராய்ட்ஸ் போட்டுக் கொண்டேன். 

அந்த மருந்தை கொடுத்துதான் எனது உடலை குண்டாக மாற்றி இருக்கிறேன். அம்மா அம்மா போல இருக்க வேண்டும் என்று எனது மகன் அடிக்கடிச் சொல்வான். மேலும் நடிகையாக இருக்கும் பொழுது நீங்கள் அப்படி இருந்தீர்கள்.. இப்போது அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லையே என்பான். ஆகையால் அவன் நான் நன்றாக பிடித்ததை சாப்பிட்டுக்கொண்டு நன்றாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவான். 

கவலை இல்லை!

ஆகையால் எனக்கு நான் குண்டாக இருப்பதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை. சமீப காலமாக நான் ஆந்திராவிற்கு சென்று சாப்பிட்டு எனக்கு பிபி வந்து விட்டது. அப்பளம் இல்லாமல் ஊறுகாய் இல்லாமல் சாப்பிட மாட்டேன். ஆனால் டாக்டர் தற்போது உப்பை தவிர்க்க வேண்டும் என்று சொல்லிவிட்டார். அதனால் தற்போது உப்பை தவிர்த்து இருக்கிறேன். 

கல்யாணம் முடிந்த புதிதில் நான் மிக மிக சந்தோஷமாக இருந்தேன். அந்த சமயத்தில் எனக்குப் பிடித்ததை எல்லாம் நன்றாக சாப்பிட்டேன். காலையில் இட்லி வடை சாம்பார் சட்னி எல்லாவற்றையும் பிசைந்து அடிப்பேன். எனக்கு அப்படி ஒரு சந்தோஷம் கிடைக்கும். மதியமும் நிறைய உணவு வகைகளை செய்து சாப்பிடுவேன். இப்போது வரை அந்த பழக்கம் தொடர்கிறது.” என்று பேசினார்.

நன்றி: கலாட்டா!

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.