Surya: கதையவே மாத்த சொல்லிட்டாங்கப்பா';சூர்யா கொடுத்த நெருக்கடி! - மாஸ் ஃப்ளாப்பிற்கு இதுதான் காரணம்! - வெங்கட் பிரபு!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Surya: கதையவே மாத்த சொல்லிட்டாங்கப்பா';சூர்யா கொடுத்த நெருக்கடி! - மாஸ் ஃப்ளாப்பிற்கு இதுதான் காரணம்! - வெங்கட் பிரபு!

Surya: கதையவே மாத்த சொல்லிட்டாங்கப்பா';சூர்யா கொடுத்த நெருக்கடி! - மாஸ் ஃப்ளாப்பிற்கு இதுதான் காரணம்! - வெங்கட் பிரபு!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 03, 2024 12:04 PM IST

Surya: சில படங்களில் நான் கதையை மாற்ற வேண்டிய சூழ்நிலைக்கு தயாரிப்பு தரப்போ அல்லது நடிகர் தரப்போ அல்லது அங்கு இருக்கும் திரை துறையோ தள்ளி விடுகிறது. அப்போது அதுவேலை செய்யாமல் போய்விடுகிறது - வெங்கட் பிரபு!

Surya: கதையவே மாத்த சொல்லிட்டாங்கப்பா' .. சூர்யா கொடுத்த நெருக்கடி! - மாஸ் ஃப்ளாப்பிற்கு இதுதான் காரணம்! - வெங்கட் பிரபு!
Surya: கதையவே மாத்த சொல்லிட்டாங்கப்பா' .. சூர்யா கொடுத்த நெருக்கடி! - மாஸ் ஃப்ளாப்பிற்கு இதுதான் காரணம்! - வெங்கட் பிரபு!
மாஸ் படத்தில் சூர்யா வெங்கட் பிரபு!
மாஸ் படத்தில் சூர்யா வெங்கட் பிரபு!

இது குறித்து அவர் பேசும் போது, “உண்மையில் மாஸ் என்கிற மாசிலாமணி படத்தை மிகவும் சிம்பிளாகத்தான் எடுக்க நினைத்தேன். கதாநாயகனுக்கு ஒரு விபத்து நடக்கிறது. அந்த விபத்திற்கு பிறகு அவனுக்கு பேய்களுடன் பேசும் வாய்ப்பு கிடைக்கிறது.அப்போது அதில் ஒரு பேய், அவனிடம் உதவி கேட்க முன் வந்து, அவனை தன் வசம் ஆக்குவதற்கு முயற்சி செய்கிறது. இவ்வளவுதான் நான் கதையாக எழுதி இருந்தது.

சூர்யா தரப்பு கொடுத்த நெருக்கடி

முதலில் அதை நான் நகைச்சுவையாகத்தான் எழுதி இருந்தேன். படமாகவே அதனை முழு நீள நகைச்சுவை படமாக கொண்டு வர வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் சூர்யா தரப்பில் இருந்து மங்காத்தா போன்ற ஒரு படத்தைக் கொடுத்து விட்டீர்கள். அப்படி இருக்கும் போது உங்களிடம் இருந்து வரும் படம் மாஸ் மற்றும் ஆக்சன் கலந்து இருக்க வேண்டும் என்றனர். படமாகவும் அது மிகப்பெரிய படமாக வரவேண்டும் கூறிவிட்டனர்.

அதன் பின்னர் நான் அந்தப்படத்தில் நிறைய விஷயங்களை மாற்றம் செய்தேன். கமர்சியலுக்காக சில விஷயங்களை நான் உள்ளே கொண்டு வந்தேன். அந்த படத்தின் ஃப்ளாஷ் பேக்கை நீங்கள் பார்த்தீர்கள் என்றால், அது முழுக்க முழுக்க 80களில் நடக்கக்கூடிய ஒரு ஃப்ளாஷ் பேக் போன்றுதான் நான் எழுதி இருந்தேன். யுவனிடம் சொல்லும் பொழுதும், அங்கு முழுக்க முழுக்க லைவ் மியூசிக்தான் வேண்டும். அதில் எனக்கு ராஜா அப்பா எப்படி மியூசிக் செய்வாரோ, அதே மாதிரியான ஒரு டோனில் மியூசிக் வேண்டும் என்று கேட்டிருந்தேன்.

வெற்றிமாறன், ரஞ்சித்திடம் கேட்பதில்லை

அந்த இடங்களையும் நான் 80களில் வந்த படம் போன்று தான் ட்ரீட் செய்து இருந்தேன். சில சமயங்களில் பிறருக்காக நம்முடைய ஐடியா மாறிவிடுகிறது. அந்த ஐடியா மாறும் பொழுது, நம்முடைய படமானது தோல்வியை நோக்கி செல்கிறது என்று நான் நினைக்கிறேன். என்னுடைய சென்னை 28, மங்காத்தா, மாநாடு உள்ளிட்ட படங்களிலெல்லாம் என்னுடைய ஐடியா எதையும் நான் மாற்றவில்லை. நான் என்ன நினைத்தேனோ அதை மட்டுமே நான் செய்திருக்கிறேன்.

சில படங்களில் நான் கதையை மாற்ற வேண்டிய சூழ்நிலைக்கு தயாரிப்பு தரப்போ அல்லது நடிகர் தரப்போ அல்லது அங்கு இருக்கும் திரை துறையோ தள்ளி விடுகிறது. அப்போது அதுவேலை செய்யாமல் போய்விடுகிறது. படமும் தோல்வியை நோக்கி சென்று விடுகிறது. ஆனால் கோட் பொருத்தவரை, என்னுடைய ஐடியா அப்படியே என்னுடைய ஐடியாவாகத்தான் இருக்கிறது. எதையுமே நான் மாற்றவில்லை. நான் தயாரிப்பாளர் தரப்பிற்கும், விஜய் தரப்பிற்கும் என்ன நான் கூறினேனோ அதை மட்டும் தான் எடுத்திருக்கிறேன். மற்றவர்களுக்காக இந்த ஐடியாவை மாற்றும் பழக்கத்தை நான் கைவிட வேண்டும் என்று நினைக்கிறேன். வெற்றிமாறனோ, ரஞ்சித்தோ மற்றவர்களுக்காக எதையும் மாற்ற மாட்டார்கள். இனி நானும் அப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று பேசினார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.