RIP Marimuthu: “பிரம்பா.. நரம்பா இருப்பார்.. எப்படித்தான் இப்படி ஆச்சோ? - குணசேகரன் கேரக்டரில் நானா? - வேலராமமூர்த்தி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rip Marimuthu: “பிரம்பா.. நரம்பா இருப்பார்.. எப்படித்தான் இப்படி ஆச்சோ? - குணசேகரன் கேரக்டரில் நானா? - வேலராமமூர்த்தி!

RIP Marimuthu: “பிரம்பா.. நரம்பா இருப்பார்.. எப்படித்தான் இப்படி ஆச்சோ? - குணசேகரன் கேரக்டரில் நானா? - வேலராமமூர்த்தி!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 11, 2023 03:03 PM IST

மாரிமுத்துவின் இறப்பு குறித்தும் அவருக்கு மாற்றாக அவர் நடித்த எதிர்நீச்சல் சீரியலில் தான் நடிக்கிறேனா என்பது குறித்தும்வேலராமமூர்த்தி பேட்டி அளித்திருக்கிறார்.

மாரிமுத்து
மாரிமுத்து

எதிர்நீச்சல் சீரியலை நான் பார்ப்பது கிடையாது. பார்ப்பதற்கு அவகாசமும் கிடைப்பதில்லை. ஆனால் நான் கேள்விபட்டு இருக்கிறேன். டி.ஆர்.பி ரேட்டிங்கில் நம்பர் 1 இடத்தில் இருக்கக்கூடிய சீரியலாக அது இருக்கிறது. 

ஒரு கிராமத்திற்கு சென்றோம்.. அங்கு சிறுபிள்ளைகள் வரும்.. அந்த பிள்ளைகளிடம் எதிர்நீச்சல் பார்த்தியா? என்று மாரி கேட்பார். என்னை எதிர்நீச்சல் சீரியலில் அவர் நடித்த கதாபாத்திரத்தில் நடிப்பீர்களா என்று கேட்கிறீர்கள். நான் தற்போது சினிமாவில் மிகவும் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறேன். இதற்கு முன்பே ரம்யா கிருஷ்ணன், ராதிகா உள்ளிட்டவர்கள் அவர்கள் நடித்த சீரியலில் நடிக்க என்னைக் கேட்டார்கள். அந்த நேரத்தில் சீரியலே வேண்டாம் என்று தவிர்த்தேன்.

தற்போது என் மீது அக்கறை கொண்ட எல்லோரும் இந்தக் கதாபாத்திரத்தில் நடியுங்கள் என்று சொல்கிறார்கள். பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறது. முடிவான பிறகு அந்தத்தகவலை வெளியே சொல்லலாம் என்று இருக்கிறேன். 

அவர் நோயுள்ள உடம்பாக இல்லை. எப்போதும் பிரம்பு போல சாட்டையாக இருப்பார். நடக்கமுடியாமல்.. மூச்சு விட முடியாமல் என ஒரு நோயுள்ள மனிதரை போல அவர் இருந்ததில்லை. நரம்பாக இருப்பார், படியெல்லாம் சகஜமாக ஏறுவார். எப்படித்தான் இப்படி நடந்தது என்று தெரியவில்லை.” என்று பேசினார்.

நன்றி: பிஹைண்ட் வுட்ஸ்!

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.