Varisu family: வாரிசு குடும்ப புகைப்படம் ரிலீஸ்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Varisu Family: வாரிசு குடும்ப புகைப்படம் ரிலீஸ்

Varisu family: வாரிசு குடும்ப புகைப்படம் ரிலீஸ்

Aarthi V HT Tamil
Jan 11, 2023 12:42 PM IST

வாரிசு படத்தின் குடும்ப புகைப்படம் வெளியாகி உள்ளது.

வாரிசு குடும்ப புகைப்படம்
வாரிசு குடும்ப புகைப்படம்

இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ள இப்படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார்.

மேலும் பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, பிரபு, சரத்குமார், ஸ்ரீகாந்த், சாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர். இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. படத்தின் ட்ரெய்லர் நாளை (ஜனவரி 4) மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்து உள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.

இந்நிலையில் வாரிசு படத்தின் புதிய கவுண்டவுன் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரில் நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, ஷாம், பிரபு சரத்குமார், ஜெயசுதா, சங்கீதா, ஶ்ரீ காந்த் ஆகியோர் போஸ்டரில் தோன்றி உள்ளனர்.

வாரிசு படத்தின் சென்னை சிட்டி, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், வட & தென் ஆற்காடு ஆகிய பகுதிகளில் வாரிசு குடும்ப புகைப்படம்ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இந்த படத்தின் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஏரியா உரிமத்தை பிரபல வினியோகஸ்தர் முத்துக்கனி கைப்பற்றி உள்ளார். மேலும், இந்த படத்தின் திருச்சி தஞ்சாவூர் ஏரியாவை பிரபல வினியோகஸ்தரான ராது இன்ஃபோடெயின்மெண்ட் வி.எஸ். பாலமுரளி கைப்பற்றி உள்ளார். சேலம் ஏரியாவை வினியோகஸ்தர் செந்தில் கைப்பற்றியுள்ளார். மதுரை உரிமத்தை Five Star Flims நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் வாரிசு மற்றும் துணிவு படத்தின் டிக்கெட் விற்பனை சனிக்கிழமை தொடங்கியது. இணையத்தில் டிக்கெட்கள் விற்பனை தொடங்கியவுடன் முடிந்தது. 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.