Varalakshmi Sarathkumar: வில்லியாக நடிப்பது ஏன்? - வரலட்சுமி சரத்குமார்
நடிகை வரலட்சுமி சரத்குமார் தான் ஏன் தொடர்ந்து வில்லியாக நடிக்கிறேன் என தெரிவித்து உள்ளார்.
வில்லி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் படங்களில் வில்லியாக நடித்து இருக்கிறார். கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இவர் படங்களை தேர்வு செய்து வருகிறது.
இவர் ஏன் நாயகியாக நடிக்காமல், வில்லியாக நடிக்கிறார் என பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர். இது குறித்து வரலட்சுமி சரத்குமார் பேட்டி அளித்து உள்ளார்.
அவர் கூறுகையில், “எனக்கு வில்லியாக நடிக்க நிறைய வாய்ப்புகள் வருகிறது. சினிமாவில் கிளாமர் கதாபாத்திரங்களில் நடிக்க நிறைய நடிகைகள் இருக்கிறார்கள்.
ஆனால் சில வில்லி கதாபாத்திரங்களில் நடிக்க நான் மட்டுமே தகுதியான நிலையில் இருக்கிறேன். இது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுக்கிறது.
பாலா இயக்கிய தாரை தப்பட்டை படத்தில் நான் நடித்தபோது ஒரு காட்சியில் என்னை அடிப்பார்கள். அடி வாங்கிய படியே வசனம் பேச வேண்டும். அதில் ஒரே டேக்கில் நடித்து முடித்தேன். ஆனால் பாலா கட் சொல்ல மறந்து விட்டார்.
என்னை அடித்ததில் காயம் ஏற்பட்டது. அதை பார்த்து பாலா அதிர்ச்சியானார். காட்சி நன்றாக வந்த திருப்தி மட்டுமே எனக்கு இருந்தது. பிறகு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அதை என் வாழ்க்கையில் மறக்க முடியாது. அந்த படத்தில் இருந்து பாலா எனக்கு குருவாகி விட்டார்” என தெரிவித்தார்.
சமீபத்தில் இரவின் நிழல், பொய்க்கால் குதிரை, காட்டேரி உள்ளிட்ட படங்களில் தோன்றி இருந்தார். வரலட்சுமி தற்போது பாம்பன், வீர சிம்ம ரெட்டி, பிறந்தால் பரசாக்தி, கலர்ஸ், லாகம், சபரி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
முன்னதாக உடற்பயிற்சி மூலம் தனது அழகை மெருகேற்றி வருகிறார். அதில், ”போராட்டம் உண்மையானது. சவால் உண்மையானது. ஆனால் நீங்கள் விரும்பியதை அடைவதை எதுவும் தடுக்க முடியாது. நீங்கள் என்னவாக இருக்க வேண்டும் என்று யாராலும் சொல்ல முடியாது. உங்களை நீங்களே சவால் விடுங்கள். உங்களை நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள்.
4 மாத கடின உழைப்பு, இதற்கு நான் காட்ட வேண்டியது இதுதான். உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதைச் செய்யுங்கள். மற்றவர்களை மகிழ்விக்க எதையும் செய்யாதீர்கள். உன்னால் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்று யாரும் சொல்ல வேண்டாம். நம்பிக்கை ஒன்றே உனது ஆயுதம்” எனக் குறிப்பிட்டு இருந்தார்.
டாபிக்ஸ்