தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Vanitha Vijayakumar Posts Pictures With Bigg Boss 7 Contestants

Vanitha Vijayakumar: ஓ.. குடும்பமாக மாறிய டீம் 'A' .. ஆனா கேங் லீடர் காணுமே.. வனிதா பதிவை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

Aarthi Balaji HT Tamil
Jan 21, 2024 09:04 AM IST

Vanitha Vijayakumar Instagram: வனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

வனிதா விஜயகுமார் இன்ஸ்டா பதிவு
வனிதா விஜயகுமார் இன்ஸ்டா பதிவு

ட்ரெண்டிங் செய்திகள்

பிக் பாஸ் தமிழ் வரலாற்றில் டைட்டில் பட்டத்தை வென்ற முதல் வைல்ட் கார்டு போட்டியாளர் என்ற பெருமையை விஜே அர்ச்சனா உருவாக்கினார். சுவாரஸ்யமாக, அவர் நிகழ்ச்சியில் அதிகம் பேசப்பட்ட போட்டியாளர்களில் ஒருவர்.

பிக் பாஸ் வீட்டில் இரண்டு டீம் இருந்தது. A - டீம், B - டீம். A டீம் தலைவியாக மாயா இருந்தார். இவை இரண்டிலும் இல்லாமல் தன்னுடைய விளையாட்டு தனியானது என நிரூபித்து டைட்டில் பட்டத்தை தட்டிச் சென்றார் அர்ச்சனா.

இதனிடையே டீம் A வீட்டிற்குள் மட்டுமில்லாமல் வெளியே வந்தும் தங்கள் அலப்பறையைத் தொடர்ந்து செய்கிறார்கள். இதில் புதியதாக வனிதா விஜயகுமாரும் இணைந்து இருக்கிறார். காரணம் அவரின் மகள் ஜோவிகா, டீம் A-வை சேர்ந்தவர் என்பதால் போல?!.

அர்ச்சனாவிற்கு ஆரம்பத்தில் இருந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் வனிதா விஜயகுமார் கடைசியாக தன் மகளையும் பயன்படுத்தி ஆட்டத்தை மாற்ற நினைத்தார். நிகழ்ச்சி முடியும் கடைசி வாரத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற ஜோவிகா, அர்ச்சனாவிற்கு எதிராக மாயாவிடம் பல விஷயங்களை முன் வைத்தார். இதனால் மாயா, அர்ச்சனா இடையே இருந்த நட்பு உடைந்தது. ஜோவிகா பேசியது அனைத்துமே வனிதா விஜயகுமார், சொல்லிக் கொடுத்து பேசியது என ஒரு தரப்பினர் கூறினார்.

மேலும், டீம் A - வை சேர்ந்தவர்கள் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதும் வனிதா விஜயகுமார் வீட்டிற்கு சென்று சந்தித்தனர்.

இந்நிலையில் வனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், புல்லி கேங்கை சேர்ந்த ஜோவிகா, பூர்ணிமா, நிக்சன், விஜய் வர்மா ஆகியோர் உள்ளனர். இத்துடன் புது கேங் லீடராக வனிதா விஜயகுமாரும் அமர்ந்து இருக்கிறார். அதில், " குடும்பத்தின் திருமணம்” எனக் குறிப்பிட்டு இருந்தார்.

இதை பார்த்த நெட்டிசன்கள், “ ஓ.. புல்லி கேங் குடும்பமாக மாறிவிட்டதா? அப்போ ஏன் கேங் லீடர் மாயாவை காணும்? அப்போ புது கேங் லீடராக வனிதா மாறிவிட்டாரா? என கலாய்த்து வருகின்றனர்.

முன்னதாக விஷ்ணு, ஃபிராவோ உள்ளிட்ட டீம் A, ஒரு பக்கம் பார்ட்டி வைத்து கொண்டாடினார்கள். அதே போல் மறுபக்கத்தில் பூர்ணிமா, மாயா, கானா பாலா, விசித்ரா போன்ற டீம் B, வனிதாவுடன் சேர்ந்து பார்ட்டி வைத்து கொண்டாடினார்கள். இவர்களின் கொண்டாட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

106 நாட்கள் நடக்கும் பிக் பாஸ் கேம்மை, கேம்மாக பார்க்காமல் இந்த 7 ஆவது சீசனில் மட்டும் தான் போட்டியாளர்கள் வெளியே வந்தும் டீம் A, டீம் B என இரண்டு அணிகளாகப் பிரிந்து பழகி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel
பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.