Vanitha: அடி பட்டா தான் புத்தி வரும்.. மகள் என்று கூட பாராமல் ஜோவிகாவுக்கு சாபம் கொடுத்த வனிதா
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vanitha: அடி பட்டா தான் புத்தி வரும்.. மகள் என்று கூட பாராமல் ஜோவிகாவுக்கு சாபம் கொடுத்த வனிதா

Vanitha: அடி பட்டா தான் புத்தி வரும்.. மகள் என்று கூட பாராமல் ஜோவிகாவுக்கு சாபம் கொடுத்த வனிதா

Aarthi V HT Tamil
Nov 24, 2023 06:30 AM IST

வனிதா தன் மகள் ஜோவிகா பற்றி பேசிய வீடியோ வைரலாகிறது.

வனிதா, ஜோவிகா
வனிதா, ஜோவிகா

டாஸ் விளையாடி வெற்றி பெறுகிறோமோ இல்லையோ பிக் பாஸ் வீட்டின் போட்டியாளருக்கு வகை, வகையாக சமைத்து கொடுத்து சக போட்டியாளர்களை அசத்தி கவர்ந்து இருக்கிறார். ஆரம்பத்தில் எந்த அணியிலும் சேராமல் தணித்து விளையாடி ஸ்டார்ங் போட்டியாளர் பட்டியலில் இருந்தார். ஆனால் இப்போது இவரும் புல்லி கேங் அணியில் சேர்ந்துவிட்டார். அதனால் எதிர்மறையான பெயர்கள் வந்து இருக்கிறது.

அதிலும் குறிப்பாகக் கடந்த சில வாரங்களாகவே, ஜோவிகா அமைதியாக இருப்பதாக பேசப்படுகிறது. முதல் வாரத்தில் வெளியான ப்ரொமோ வீடியோக்களில் ஜோவிகா நிச்சயம் இருப்பார். குறிப்பாக பிரதீப்பை தட்டிக் கேட்டது எல்லாம் சிறப்பாக இருந்தது. அதன் பிறகு புல்லி கேங்குடன் சேர்ந்த பிறகு ஜோவிகாவின் இமேஜ் முற்றிலும் மாறிப்போனது.

பிக் பாஸ் வீட்டில் இப்போது எல்லாம் ஜோவிகா சாப்பிடுவது, தூங்குவது, எப்போது பார்த்தாலும் ஓடி சென்று விழுவதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார். இதை எல்லாம் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் சிலர் கலாய்த்து வீடியோவாக ஷேர் செய்கிறார்கள்.

இது தொடர்பாக வனிதா விஜயகுமார் தன் மகளுக்கு சாபம் கொடுப்பது போல் Indiaglitz யூடியூப் சேனலில் பேசி இருக்கிறார்.

அவர் கூறுகையில், “அவளுக்கு உண்மையில் அறிவே இல்லை. எங்க வீட்டிலேயே காருக்கு போவதாக இருக்கட்டும், எங்க அம்மா வீடு ஆலப்பக்கமாக இருக்கட்டும் எல்லா இடத்திலும் ஓடாத வழுக்கிவிட்டுவிடும் என சொல்லி கொண்டே இருப்போம். ஒரு நாள் பல்லு உடையும் என சொல்லி சொல்லி அடக்கி வைத்து இருக்கிறேன்.

அவளுக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. நடப்பதைத் தாண்டி ஓடனும். அவளுக்கு ஓட ரொம்ப பிடிக்கும். எங்க வீடு பெரியது. அதை சூற்றி அவ ஓடுவா. சொல்லி சொல்லி பார்த்தும் கேட்கவில்லை என்றால் கீழே விழட்டும். கீழே விழுந்து அடி பட்டா தான் புத்தி வரும் “ என்றார். வனிதாவின் பேசுக்கு எதிராக பலரும் குரல் எழுப்பி வருகிறார்கள்.

மேலும் வனிதா தன் மகளுக்கு அனுப்பிய டிஷர்டில், சிங்கம் சிங்கிளாக தான் இருக்கும் என வாசகம் அடங்கிய டி-ஷர்டை அனுப்பி இருந்தார். இதன் மூலம் தனியாக விளையாடச் சொல்லி மகளுக்கு அவர் ரகசிய குறி சொல்லுகிறார் என சமூக வலைத்தளங்களில் பேசப்படுகிறது.

நன்ற்: Indiaglitz 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.