தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Vani Bhojan Expressed Her Desire To Join In Politics

Vani Bhojan: எனக்கும் அரசியல் ஆசை இருக்கிறது, விஜய் கட்சிக்கு வாய்ப்பு தர வேண்டும் - வாணி போஜன் பளிச் போச்சு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 12, 2024 04:58 PM IST

எனக்கும் அரசியலில் நுழைய ஆசை இருக்கிறது விஜய்க்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என பேசி ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளார் நடிகை வாணி போஜன்.

அரசியலுக்கு வர விரும்பும் வாணி போஜன்
அரசியலுக்கு வர விரும்பும் வாணி போஜன்

ட்ரெண்டிங் செய்திகள்

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நிருபர்களின் கேள்விகளுக்கு இதுதொடர்பாக நடிகை வாணி போஜன் கூறியதாவது:

சினிமாவில் மசாலா படங்களை விட, நல்ல கருத்துள்ள படங்கள் பார்ப்பதில் பெரிய வித்தியாசம் உள்ளது. சமூக கருத்துள்ள படம் ஒன்றில் நடித்து முடித்துள்ளேன். விரைவில் அந்த படம் வெளியாகவுள்ளது.

அரசியலுக்கு இவர்தான் வர வேண்டும் என்பதை யாராலும் சொல்ல முடியாது. மக்களுக்கு நன்மை செய்ய விரும்பும் யாராக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம். எனக்கு கூட அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசை இருந்தது. செங்களம் என்ற வெப் சீரிஸில் நடித்தபோது அரசியலுக்கு வர வேண்டும் என விரும்பினேன். இப்புவும் கூட எனக்கு அந்த ஆசை உள்ளது.

அரசியலில் விஜய்க்கும் வாய்ப்பை கொடுக்கலாம். அவர் என்ன செய்கிறார். அவரது நோக்கம் என்ன என்பது பற்றி நமக்கும் தெரிய வரும்.

இவ்வாறு நடிகை வாணி போஜன் கூறினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.