Varisu: ‘வாரிசு’ ஹேப்பியானு கேட்டதுக்கு விஜய் சொன்ன பதில் என்ன? -வம்சி உருக்கம்
Varisu Success Meet in Chennai: நான் தெலுங்கு இயக்குனரோ தமிழ் இயக்குனரோ இல்லை. நான் முதலில் மனிதன். பிறகுதான் எல்லாம் - வாரிசு இயக்குனர் வம்சி

வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக கடந்த 11ஆம் தேதி வெளியானது. தில் ராஜூ தயாரித்துள்ள இப்படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகிபாபு, ஷ்யாம், கணேஷ் வெங்கட்ராம், சங்கீதா, ஜெயசுதா உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
குடும்ப கதையை அடிப்படையாக கொண்டு உருவான இப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் படம் உலக அளவில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழில் நல்ல வரவேற்பினை பெற்றதைத் தொடர்ந்து தற்போது தெலுங்கில் ‘வாரசுடு’ வெளியாகியுள்ளது. சங்கராந்தியை முன்னிட்டு இந்தப் படம் உலகம் முழுவதும் ஜனவரி 14-ல் ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழைப் போலவே தெலுங்கிலும் வாரசுடு படத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் அதன் கொண்டாட்டங்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.