தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Surya Jyothika: ‘ஜோதிகா கொடுத்த குடைச்சல்?.. மனம் மாறிய சூர்யா..கோபத்தின் உச்சியில் சுதா.. புறநானூறு புகையான கதை

Surya jyothika: ‘ஜோதிகா கொடுத்த குடைச்சல்?.. மனம் மாறிய சூர்யா..கோபத்தின் உச்சியில் சுதா.. புறநானூறு புகையான கதை

Kalyani Pandiyan S HT Tamil
May 29, 2024 06:00 AM IST

Surya jyothika: ஜோதிகா தரப்பு கதையின் வீரியத்தை குறையுங்கள் என்று கூறியிருக்கிறது. ஆனால், அதற்கு சுதா தயாராக இல்லை. இன்னொரு தகவல் என்னவென்றால், சூர்யா சுதா கொங்கராவின் அனுமதி இல்லாமல் இன்னொரு இயக்குநரிடம் புறநானூறு ஸ்கிரிப்ட்டை கொடுத்து படிக்கச் சொன்னதாக சொல்லப்படுகிறது - புறநானூறு புகையான கதை

Surya jyothika: ‘ஜோதிகா கொடுத்த குடைச்சல்?.. மனம் மாறிய சூர்யா..கோபத்தின் உச்சியில் சுதா.. புறநானூறு புகையான கதை!
Surya jyothika: ‘ஜோதிகா கொடுத்த குடைச்சல்?.. மனம் மாறிய சூர்யா..கோபத்தின் உச்சியில் சுதா.. புறநானூறு புகையான கதை!

ட்ரெண்டிங் செய்திகள்

புறநானூறு ட்ராப்

இது குறித்து அவர் பேசும் போது, “ சுதாகொங்கரா புறநானூறு கதையை சொல்லும் பொழுது, சூழ்நிலை வேறு மாதிரியாக இருந்தது. அப்போது சூர்யாவிற்கு ஹிந்தியில் நடிக்க வேண்டும் என்றெல்லாம் ஆசை கிடையாது. இன்னொன்று ஜோதிகாவும் சூர்யாவுடன் சென்னையில் வசித்துக் கொண்டிருந்தார். ஜோதிகா மும்பை சென்று மீண்டும் ஹிந்தி படங்களில் நடிக்க வேண்டும் இன்று ஆசைப்பட்டதன் விளைவுதான் புறநானூறு படத்தில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைக்கான காரணம். அதாவது புறநானூறு படத்தில் இந்தி எதிர்ப்பை மையப்படுத்தி கதை அமைக்கப்பட்டு இருப்பதாக பேசப்படுகிறது. 

இந்த நிலையில் இந்தக் கதையை கேட்ட ஜோதிகா தரப்பு கதையின் வீரியத்தை குறையுங்கள் என்று கூறியிருக்கிறது. ஆனால், அதற்கு சுதா தயாராக இல்லை. இன்னொரு தகவல் என்னவென்றால், சூர்யா சுதா கொங்கராவின் அனுமதி இல்லாமல் இன்னொரு இயக்குநரிடம் புறநானூறு ஸ்கிரிப்ட்டை கொடுத்து படிக்கச் சொன்னதாக சொல்லப்படுகிறது. இதில் கடும் கோபம் அடைந்த சுதா, சூர்யாவிடம் இதுகுறித்து கேட்டு விவாதம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. 

தமிழக நிலைமை 

முன்பு, தமிழகத்தைப் பொறுத்தவரை பெரும்பான்மையான மக்கள் உள்ளூரில் விவசாயம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம் சென்று ஹிந்தி கற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லும் பொழுது, எங்களுக்கு தமிழ் போதும். தொடர்பு மொழியாக ஆங்கிலம் போதும் என்ற கொள்கையில் மிகவும் தீவிரமாக நின்றார்கள். 

ஆனால் இன்றைய தினம் அப்படியல்ல. எங்களுக்கு ஹிந்தி தேவைப்பட்டால் நாங்கள் கற்றுக் கொள்கிறோம் என்ற கொள்கையில் உறுதியாக நிற்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் புறநானூறு மாதிரியான ஹிந்தி எதிர்ப்பு கதையை கொண்டு வந்து இங்கு பிட்ச் செய்வதே மிகவும் சவாலான ஒன்று. ஆனால் அதை அவர்கள் செய்திருக்கிறார்கள்.அது நடக்கவில்லை. 

வாடிவாசல் நிலைமை என்னாச்சு? 

வாடிவாசல் திரைப்படத்தைப் பொறுத்தவரை சூர்யா அந்த படத்தில் இதுவரை நடிக்கவில்லை என்று சொல்லவில்லை. வெற்றிமாறனும், அந்த படத்தை விட்டு சூர்யா விலகிவிட்டார் என்றும் கூறவில்லை. ஆனால் இருவரும் ஒருவரை ஒருவர் அவர்களாகவே அந்த படத்தில் இருந்து வெளியேறுவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 

அதற்கு காரணம் அமீர். சூர்யாவுக்கு ஆரம்பத்தில் இருந்தே அமீர் மீது ஒரு வெறுப்பு இருந்து கொண்டே இருக்கிறது. அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இந்த நிலையில் வாடிவாசல் திரைப்படத்தில் அமீர் நிச்சயமாக நடிப்பார் என்று வெற்றிமாறன் அறிவித்துவிட்ட நிலையில், அமீருடன் இணைந்து பணியாற்ற சூர்யாவிற்கு துளி கூட விருப்பமில்லை. இன்னொன்று இந்தக்கதையை சிரஞ்சீவியின் மகனான ராம்சரணிடமும் வெற்றிமாறன் சென்று கூறி இருக்கிறார். ஆனால் அவருக்கு அந்த கதையில் உடன்பாடு இல்லை. இது சூர்யாவிற்கு காதுக்கு செல்லும் பொழுது அவர் மிகவும் வருத்தம் அடைந்ததாக சொல்லப்படுகிறது” என்று பேசினார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்